மெரிடியன் எக்ஸ் ஜீப்பின் ப்ரீமியம் எடிஷன் எஸ்.யு.வி.,
மெரிடியன் எக்ஸ் ஜீப்பின் ப்ரீமியம் எடிஷன் எஸ்.யு.வி.,
மெரிடியன் எக்ஸ் ஜீப்பின் ப்ரீமியம் எடிஷன் எஸ்.யு.வி.,
ADDED : ஜூன் 12, 2024 11:05 AM

'ஜீப் இந்தியா' நிறுவனம், 'மெரிடியன் எக்ஸ்' என்ற ப்ரீமியம் எடிஷன் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரை வித்தியாசப்படுத்தும் வகையில், ஸ்டைல் புதுப்பிப்பு செய்யப்பட்டதோடு, கூடுதல் அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, சாம்பல் நிற ரூப் மற்றும் அலாய் சக்கரங்கள், உட்புற அலங்கார விளக்குகள், சன் ஷேடுகள், ஏர் பியூரிபையர், ப்ரீமியம் கார்பெட்டுகள், டேஷ் கேம் உள்ளிட்டவை புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த காரில், 7 பேர் வரை பயணிக்கலாம்.
பொதுவாக, 'ஸ்டெல்லாண்டிஸ்' குழுமத்தின் இன்ஜின்கள் நம்பகமாகவும், சற்று ஆக்ரோஷமாகவும் தயாரிக்கப்படும். இந்த காரில், ஏற்கனவே இருக்கும், அதே 2 லிட்டர், மல்ட்டிஜெட் டீசல் இன்ஜின் தான் பயன்படுத்தப்படுகிறது. இதன் இன்ஜினோடு, 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
விலை: - ரூ.29.49 லட்சம்