Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/கடையாணி/ மஹிந்திரா பொலேரோ சி.என்.ஜி., பிக்கப் 1.9 டன் எடை சுமக்கும், 'கார்கோ கிங்'

மஹிந்திரா பொலேரோ சி.என்.ஜி., பிக்கப் 1.9 டன் எடை சுமக்கும், 'கார்கோ கிங்'

மஹிந்திரா பொலேரோ சி.என்.ஜி., பிக்கப் 1.9 டன் எடை சுமக்கும், 'கார்கோ கிங்'

மஹிந்திரா பொலேரோ சி.என்.ஜி., பிக்கப் 1.9 டன் எடை சுமக்கும், 'கார்கோ கிங்'

ADDED : ஜூலை 02, 2025 07:49 AM


Google News
Latest Tamil News
'மஹிந்திரா' நிறுவனம், அதன் 'பொலேரோ பிக்கப் ஹெச்.டி., 1.9 சி.என்.ஜி.,' என்ற சி.என்.ஜி., பிக்கப் டிரக்கை அறிமுகம் செய்துள்ளது. இந்த சரக்கு வாகனம், டீசல் வகையிலும் கிடைக்கிறது.

இந்த பிக்கப் டிரக்கில், 1.85 டன் எடை வரை சுமக்க முடியும். இதில், 180 லிட்டர் சி.என்.ஜி., டேங்க் உள்ளதால், ஒரு முறை டேங்க்கை நிறப்பினால், 400 கி.மீ., வரை செல்லலாம். இதில், 2.5 லிட்டர், டர்போ சார்ஜிடு சி.என்.ஜி., இன்ஜின் வருகிறது. இது, 81 ஹெச்.பி., பவரையும், 220 என்.எம்., டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. மேலும் இதில், 5 - ஸ்பீடு கியர்பாக்ஸ் பவர் ஸ்டியரிங் வசதிகள் உள்ளன.

அம்சங்களை பொறுத்தவரை, டிரைவர் உட்பட இரு பயணியர் பயணிக்க பெரிய ஏ.சி., கேபின், டிரைவர் சீட் உயரம் மாற்றும் வசதி, 16 அங்குல டயர்கள், லீப் ஸ்பிரிங் சஸ்பென்ஷன்கள், மஹிந்திராவின் ஐமேக்ஸ் கார் இணைப்பு வசதிகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இந்த பிக்கப் டிரக், 'ஹெவி டியூட்டி', 'சிட்டி சீரிஸ்' என இரு மாடல்களில் கிடைக்கிறது.

விபரக்குறிப்பு:


இன்ஜின் - 2.5 லிட்டர், டர்போ சார்ஜிடு சி.என்.ஜி.,
பவர் - 81 ஹெச்.பி.,
டார்க் - 220 என்.எம்.,
சி.என்.ஜி., டேங்க் - 180 லிட்டர் (400 கி.மீ., பயணம்)
சுமக்கும் எடை - 1.85 டன்



விலை: ரூ.11.19 லட்சம்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us