நேர்காணல்: 'ஹேட்ச்பேக்' கார்கள் புதுப்பிக்காதது, விற்பனை சரிவுக்கு முக்கிய காரணம்
நேர்காணல்: 'ஹேட்ச்பேக்' கார்கள் புதுப்பிக்காதது, விற்பனை சரிவுக்கு முக்கிய காரணம்
நேர்காணல்: 'ஹேட்ச்பேக்' கார்கள் புதுப்பிக்காதது, விற்பனை சரிவுக்கு முக்கிய காரணம்

மே மாதத்தில், டாடா கார் விற்பனை 11% வீழ்ச்சி கண்டுள்ளதே, ஏன்?
எங்களின் மொத்த விற்பனையில், 'ஹேட்ச்பேக் கார்'களின் பங்கு 20 சதவீதமாக உள்ளது. நீண்ட காலமாக இந்த வகை கார்கள் புதுப்பிக்காமல் இருந்ததால் விற்பனை குறைந்தது. நடப்பாண்டில் டியாகோ மற்றும் ஆல்ட்ரோஸ் ஆகிய இரு கார்களும் மேம்படுத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டன .எஸ்.யூ.வி., மற்றும் சி.என்.ஜி., பிரிவுகளில், மொத்த சந்தையை விட எங்களின் விற்பனை வளர்ச்சி அதிகமாக உள்ளது.
டாடா இ.வி., கார் சந்தை பங்கு 50 சதவீதத்திற்கு கீழ் சரிந்துள்ளது. அதை மீட்க என்ன முயற்சிகள் எடுக்கப்படுகிறது?
சந்தை பங்கு என்பது, குறுகிய கால விளையாட்டு அல்ல, நீண்ட கால விளையாட்டு. இன்றும், இ.வி., கார் சந்தையில் நாங்கள் முதல் இடத்தில் உள்ளோம். சிறிய இ.வி., கார்கள் பிரிவில், 70 சதவீத சந்தை பங்கை வைத்துள்ளோம். ஹாரியர் இ.வி., காரை அறிமுகப்படுத்தி உள்ளோம், கர்வ் இ.வி., கார், அதன் விற்பனையை அதிகரிக்க துவங்கி உள்ளது. இது தற்காலிக நிலையே தவிர, நிரந்திரம் அல்ல. எதிர்வரும் அறிமுகங்கள், நீண்ட காலத்தில் சந்தை பங்கை அதிகரிக்கும்.
அரிய வகை காந்தங்களை ஏற்றுமதி செய்ய சீனா கட்டுப்பாடு விதித்ததால், கார் உற்பத்தியில் பெரிய பாதிப்பு ஏற்படுமா?
தற்போதைய சூழலை எங்களால் சமாளிக்க முடிகிறது. ஆனால், இதே நிலை நீடித்தால் கவலைக்குறியதாகும். மத்திய அரசு மற்றும் எங்களின் வினியோக தொடர் பிரிவு இணைந்து, இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என நம்புகிறோம்.
டாடா மின்சார கார்களின் விற்பனை குறைந்தாலும், வணிகம் லாபகரமாக மாறி உள்ளதே, எப்படி?
எங்களின் பெரும்பாலான உதிரிபாகங்கள் உள்நாட்டு மயமாக்கப்பட்டுள்ளன. வினியோகர்களுடன் இணைந்து செயல்பட்டு, குறைந்த விலையில் தரமான மூலப்பொருட்கள் மற்றும் உதிரிபாகங்களை பெறுகிறோம். இதனால் விலையை கட்டுக்குள் வைக்க எங்கள் உற்பத்தி திறனும் உதவுகிறது. காரின் உற்பத்தி செலவு மற்றும் விற்பனை விலையை சமமாக வைக்கவும் முடிகிறது.