யமஹாவுடன் கே.டி.எம்., 'நேருக்கு நேர்'
யமஹாவுடன் கே.டி.எம்., 'நேருக்கு நேர்'
யமஹாவுடன் கே.டி.எம்., 'நேருக்கு நேர்'
ADDED : மார் 12, 2025 08:42 AM
'கே.டி.எம்.,' பைக் அணிவகுப்பில் இருந்து, 'டியூக் 125' மற்றும் 'ஆர்.சி., 125' பைக்குகளை நிறுத்த இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், 'யமஹா'வுக்கு போட்டி கொடுக்கும் வகையில் 160 சி.சி., பிரிவில் இரு பைக்குகளையும், கே.டி.எம்., நிறுவனம், அறிமுகப்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த இரு பைக்கு களும், கே.டி.எம்., நிறுவனத்தின் 200 சி.சி., பிரிவு கட்டுமான தளத்தில் கட்டமைக்கப்பட்ட உள்ளன. டூயல் சேனல் ஏ.பி.எஸ்., எல்.சி.டி., டிஸ்ப்ளே உள்ளிட்ட அம்சங்கள் இதில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கே.டி.எம்., 125 சி.சி., பைக்குகளின் விலை, யமஹா 'ஆர்15 மற்றும் எம்.டி., 15' பைக்குகளை விட அதிகமாக இருந்தது. எனவே 160 சி.சி., பிரிவிலும், இந்த பைக்குகளில் விலை, யமஹாவை விட அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டின் இரண்டாம் அல்லது மூன்றாம் காலாண்டில், இந்த இரு பைக்குகளும் வெளியாகும் என கூறப்படுகிறது.