கோல்ப் ஜி.டி.ஐ., போக்ஸ்வேகன் 'ஹாட் ஹேட்ச்'
கோல்ப் ஜி.டி.ஐ., போக்ஸ்வேகன் 'ஹாட் ஹேட்ச்'
கோல்ப் ஜி.டி.ஐ., போக்ஸ்வேகன் 'ஹாட் ஹேட்ச்'
ADDED : ஜூன் 04, 2025 08:56 AM

'போக்ஸ்வேகன்' நிறுவனம், 'கோல்ப் ஜி.டி.ஐ.,' என்ற பிரபலமான ஹேட்ச்பேக் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார், இறக்குமதி முறையில் விற்பனை செய்யப்படுகிறது. இது, உள்நாட்டில் விலை உயர்ந்த போக்ஸ்வேகன் கார் ஆகும்.
இந்த காரில், 2 லிட்டர், 4 - சிலிண்டர், டர்போ பெட்ரோல் டி.எஸ்.ஐ., இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. 100 கி.மீ., வேகத்தை வெறும் 5.9 வினாடியில் எட்டிப் பிடிக்கிறது. டாப் ஸ்பீடு 250 கி.மீ.,ராக உள்ளது. இந்த இன்ஜினுடன் 7 - ஸ்பீடு டி.சி.டி., ஆட்டோ கியர்பாக்ஸ் மற்றும் பிரண்ட் வீல் டிரைவ் அமைப்பு இணைக்கப்பட்டுள்ளன.
ஒளிரும் போக்ஸ்வேகன் சின்னம், ஸ்போர்ட்டி பம்பர்கள், 'மேட்ரிக்ஸ்' எல்.இ.டி., ஹெட் லைட்டுகள், 'எக்ஸ்' வடிவ பாக் லைட்டுகள், 18 அங்குல டூயல் டோன் அலாய் சக்கரங்கள், 'ஜி.டி.ஐ.,' அடையாளம், இரு எக்ஸாஸ்டுகள், ஸ்பாய்லர் ஆகியவை கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளன. 4.29 மீட்டர் நீளம் உள்ள இந்த காருக்கு, 136 எம்.எம்., கிரவுண்ட் கிளியரன்ஸ், 380 லிட்டர் பூட் ஸ்பேஸ் வழங்கப்படுகிறது.
உட்புறத்தில், 12.9 அங்குல டச் ஸ்கிரீன் அமைப்பு, 10.25 அங்குல டிரைவர் டிஸ்ப்ளே, சன் ரூப், வயர்லெஸ் சார்ஜிங் வசதி, 3-ஜோன் ஆட்டோ ஏசி, 30 அலங்கார விளக்குகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. ஆனால், வென்டட்டிலேட்டட் சீட் வசதி வழங்கப்படவில்லை. பாதுகாப்புக்கு, ஏழு காற்றுப்பைகள், டி.பி.எஸ்.எம்., அடாஸ் லெவல் 2 பாதுகாப்பு ஆகியவை வழங்கப்படுகின்றன. இந்த கார், மொத்தம் நான்கு நிறங்களில் கிடைக்கிறது.