அட்டோ 3 டைனமிக் இ.வி., எம்.ஜி.,யுடன் நேரடி போட்டி
அட்டோ 3 டைனமிக் இ.வி., எம்.ஜி.,யுடன் நேரடி போட்டி
அட்டோ 3 டைனமிக் இ.வி., எம்.ஜி.,யுடன் நேரடி போட்டி
ADDED : ஜூலை 17, 2024 07:34 AM

'பி.ஒய்.டி.,' நிறுவனம், அதன் 'அட்டோ 3 டைனமிக்' என்ற மலிவு விலை காரை அறிமுகப்படுத்தி உள்ளது. இது, சந்தையில் தற்போது இருக்கும் அட்டோ 3 காரை விட 9 லட்சம் ரூபாய் குறைவு.
இது ஆரம்ப விலை கார் என்பதால், பல அம்சங்கள் நீக்கப்பட்டுள்ளன. அடாஸ் பாதுகாப்பு வசதி, 8 ஸ்பீக்கர் சவுண்டு சிஸ்டம், அடாப்டிவ் ஹெட்லைட்டுகள், உட்புற பல வண்ண அலங்கார விளக்குகள், உட்பட பல அம்சங்கள் இதில் இல்லை. மேலும், இதன் பேட்டரி திறன், 60.48 கி.வாட்.ஹார்.,ல் இருந்து 49.92 கி.வாட்.ஹார்.,ராக குறைக்கப்பட்டுள்ளது. அதனால், இதன் ரேஞ்ச் 53 கி.மீ., குறைந்து, 468 கி.மீ.,ராக உள்ளது.
இந்த கார், எம்.ஜி., நிறுவனத்தின் இசட்.எஸ்., இ.வி., மின்சார எஸ்.யூ.வி., க்கு போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்த காரின் விலையும், 25 லட்சம் ரூபாய் முதல் ஆரம்பமாகிறது.
விலை: ரூ.24.99 லட்சம்
டீலர் : குன்-BYD - 89399 96148