Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/கடையாணி/'டி435 சூப்பர்' ஆட்டோ கிரீவ்ஸின் 'மைலேஜ் கிங்'

'டி435 சூப்பர்' ஆட்டோ கிரீவ்ஸின் 'மைலேஜ் கிங்'

'டி435 சூப்பர்' ஆட்டோ கிரீவ்ஸின் 'மைலேஜ் கிங்'


ADDED : ஜூன் 18, 2025 08:33 AM

Follow on Google

ADDED : ஜூன் 18, 2025 08:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'கிரீவ்ஸ் 3 வீலர்ஸ்' நிறுவனம், 'டி435 சூப்பர்' என்ற டீசல் ஆட்டோவை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆட்டோ, பயணியர் போக்குவரத்துக்கு 'சிட்டி' மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு 'கார்கோ' என இரு வகையில் வந்துள்ளது.

இதில், 435 சி.சி., சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, டீசல் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இது, 'ஒ.பி.டி., டி2' உமிழ்வு விதிமுறைக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆட்டோவின் மொத்த எடை, 456 கிலோவாக உள்ளது. இதனால், 330 கிலோ எடை வரை சுமக்க முடியும். அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கிடைக்கவும், எடையை நிலையாக சுமக்கவும், 10 அங்குல சக்கரங்களுக்கு பதிலாக, முதல் முறையாக 12 அங்குல சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

10.5 லிட்டர் டீசல் டேங்க் உள்ள இந்த ஆட்டோவின் மைலேஜ், 35 முதல் 38 கி.மீ., வரை தருகிறது. டாப் ஸ்பீடு, 55 கி.மீ.,ராக உள்ளது.

பயணியர் ஆட்டோ இரு மாடல்களிலும், சரக்கு ஆட்டோ மூன்று மாடல்களிலும் கிடைக்கின்றன. நாடு முழுதும் உள்ள அனைத்து விற்பனை மையங்களில், விற்பனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபரக்குறிப்பு


இன்ஜின்: 435 சி.சி., சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, டீசல்
பவர்: 7.64 ஹெச்.பி.,
டார்க்: 19 என்.எம்.,
மைலேஜ்: 35-38 கி.மீ.,
டாப் ஸ்பீடு: 55 கி.மீ.,
சுமக்கும் எடை: 330 கிலோ



விலை: ரூ.2.91 - 3.15 லட்சம்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap