கான்டினென்டல் ஜி.டி., மற்றும் ஜி.டி.சி., பென்ட்லியின் பிரமாண்ட படைப்பு
கான்டினென்டல் ஜி.டி., மற்றும் ஜி.டி.சி., பென்ட்லியின் பிரமாண்ட படைப்பு
கான்டினென்டல் ஜி.டி., மற்றும் ஜி.டி.சி., பென்ட்லியின் பிரமாண்ட படைப்பு
ADDED : ஜூலை 03, 2024 09:20 AM

'பென்ட்லி மோட்டார்ஸ்' நிறுவனம், அதன் அடுத்த தலைமுறை ஆடம்பர 'கான்டினென்டல் ஜி.டி.,' கூபே காரையும், 'ஜி.டி.சி., கன்வெர்ட்டபிள்' காரையும் உலக அளவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்டு இறுதிக்குள், இந்த கார்கள் இந்தியாவில் அறிமுகமாகும்.
முன்பு இருந்த, டபுள்யு 12 இன்ஜினுக்கு பதிலாக, புதிய அதிவேக ஹைபிரிட் வி - 8 இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இதனால், இதன் பவர் 100 எச்.பி., மற்றும் டார்க் 100 என்.எம்., அதிகரித்துள்ளன.
ஆல் வீல் ட்ரைவ் கொண்ட இந்த காரில், 8--ஸ்பீடு ஆட்டோ கியர் பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. உலகின் பெரிய 420 எம்.எம்., முன்புற டிஸ்க் பிரேக்குகள் மற்றும் 380 எம்.எம்., பின்புற டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
பளிச்சிடும் போனட் டிசைன், டைமண்ட் மெஷ் க்ரில், கண் இமையைப் போன்ற டி.ஆர்.எல்., மற்றும் ஹெட் லைட்டுகள், கூர்மையான பக்காவாட்டு டிசைன், நேர்த்தியான பின்புற பம்பர், 22 அங்குல அலாய் சக்கரங்கள் ஆகியவை காரின் பிரமாண்டத்தை காட்டுகின்றன.
நவீன உட்புற டாஷ் போர்டு, ஹீட்டட் மற்றும் கூல்டு சீட்டுகள், சொகுசு குஷன் சீட்டுகள், போன் இணைப்பு வசதிகள் உட்பட பல ஆடம்பர மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் இதில் உள்ளன.
விலை: ரூ.6 கோடி (எதிர்பார்ப்பு)