Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/கடையாணி/சிட்ரான் 'சி3 ஸ்போர்ட்ஸ் எடிஷன்'

சிட்ரான் 'சி3 ஸ்போர்ட்ஸ் எடிஷன்'

சிட்ரான் 'சி3 ஸ்போர்ட்ஸ் எடிஷன்'

சிட்ரான் 'சி3 ஸ்போர்ட்ஸ் எடிஷன்'

ADDED : ஜூன் 25, 2025 09:27 AM


Google News
Latest Tamil News
'சிட்ரான்' நிறுவனத்தின் 'சி3' ஹேட்ச்பேக் கார்கள், ஸ்போர்ட்ஸ் எடிஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 'லைவ், பீல், ஷைன்' ஆகிய மூன்று மாடல் கார்களும், இந்த எடிஷனில் வந்துள்ளன. இந்த மாடல் காருக்கு, கூடுதலாக 21,000 ரூபாய் செலுத்த வேண்டும். வயர்லெஸ் சார்ஜர் மற்றும் டேஷ் கேம் அம்சங்களுக்கு, 15,000 செலுத்த வேண்டும்.

இன்ஜின், கியர்பாக்ஸ், இதர அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை. முன்புற பம்பர், போனெட், ரூப், உட்புற சீட் கவர், ப்ளோர் மேட்கள், சீட் பெல்ட் ஆகியவை ஸ்போர்ட்ஸ் எடிஷன் கிராபிக்ஸ் மற்றும் அடையாளத்துடன் காணப்படுகின்றன.

இதில், ஏற்கனவே உள்ள 1.2 லிட்டர் என்.ஏ., பெட்ரோல், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்கள் வருகின்றன. இந்த கார், மேனுவல், ஆட்டோ ஆகிய இரு கியர்பாக்ஸ்களில் கிடைக்கிறது.

விபரக்குறிப்பு


இன்ஜின் - 1.2 லிட்டர் என்.ஏ., / 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல்
பவர் - 80 ஹெச்.பி., / 108.5 ஹெச்.பி.,
டார்க் - 115 என்.எம்., / 205 என்.எம்.,
மைலேஜ் - 19.3 கி.மீ.,
பூட் ஸ்பேஸ் - 315 லிட்டர்



விலை: ரூ.6.44 - 10.21 லட்சம்



டீலர்: VKT MOTORS-CITROEN - 73581 79213







      Our Apps Available On




      Dinamalar

      Follow us