புகாட்டி டூர்பில்லன் சூப்பர் கார் உலகின் வேகமான கார்?, 445 கி.மீ.,
புகாட்டி டூர்பில்லன் சூப்பர் கார் உலகின் வேகமான கார்?, 445 கி.மீ.,
புகாட்டி டூர்பில்லன் சூப்பர் கார் உலகின் வேகமான கார்?, 445 கி.மீ.,
ADDED : ஜூன் 26, 2024 08:48 AM

'புகாட்டி ஆட்டோமொபைல்ஸ்' நிறுவனம், 'டூர்பில்லன்' என்ற புதிய சூப்பர் காரை உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது. உலகின் மிக வேகமான காரை உருவாக்கும் இலக்கை அடைய இந்த காரை உருவாக்கியுள்ளது இந்நிறுவனம்.
சந்தையில் இருக்கும், புகாட்டி சிரோன் காருக்கு பதிலாக இந்த கார் களமிறக்கப்பட்டுள்ளது.
இந்த காரில், உலகின் அதிக பவர் கொண்ட புதிய 8.3 லிட்டர் ஹைபிரிட் என்.ஏ., இன்ஜின், நவீனமான ஏரோடைனமிக்ஸ் மற்றும் இலகுரக பொறியியல் ஆகியவை உபயோகப் படுத்தப்பட்டுள்ளன.
டர்போ இல்லாததால், சாதுவான இன்ஜின் என்று நினைத்தால், பிக்.அப்., வேகத்தில் மிரட்டிவிடும். இதன் ஆக்ரோஷ இன்ஜினோடு, 3 மோட்டார்கள் இணைக்கப்பட்டுள்ளதால், காதை கிழிக்கும் சவுண்டுடன் 1800 எச்.பி., பவரை இந்த கார் வெளிப்படுத்துகிறது.
கார் எங்கும் எடை குறைந்த கார்பன் பைபர் மற்றும் அலுமினியம் பொருட்கள், 2 மோட்டார் முன்புற ஆக்ஸில் மற்றும் 1 மோட்டார் பின்புற ஆக்ஸில், 12 நிமிடத்தில் 80 சதவீதம் சார்ஜ் ஆகும் 800 வோல்ட் சார்ஜிங் போர்ட், பட்டர்பிளை ரிமோட் கதவுகள், ஸ்விஸ் கடிகார இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டாஷ் போர்டில் மறைக்கப்பட்டுள்ள இன்போடெயின்மென்ட் அமைப்பு என, பல ஆடம்பர அம்சங்கள் உள்ளன.
விலை - ரூ.34 கோடி