களம் காணும் 4 ஹூண்டாய் இ.வி.,க்கள்
களம் காணும் 4 ஹூண்டாய் இ.வி.,க்கள்
களம் காணும் 4 ஹூண்டாய் இ.வி.,க்கள்
ADDED : ஜூன் 19, 2024 12:16 PM

வரும் காலத்தில் 4 மின்சார கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும், இந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில், 'க்ரெட்டா இ.வி.,' காரை களமிறக்க உள்ளதாகவும் 'ஹூண்டாய் மோட்டார் இந்தியா' நிறுவனம் தெரிவித்துள்ளது.
பங்குச் சந்தை வாயிலாக முதலீடுகளை ஈர்க்க, இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் 'ஐ.பி.ஓ.,' தொடங்குவதற்கான ஆவணங்களை ஹூண்டாய் நிறுவனம் தாக்கல் செய்தது.
அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்ததாவது:
எங்கள் மின்சார கார்களின் போட்டித்தன்மையை உயர்த்த, உள்நாட்டு உபகரண தயாரிப்பு திறனை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.
மேலும், எங்கள் மின்சார வாகன வினியோக சங்கிலியை உள்நாட்டுமயமாக்க பல இந்திய மற்றும் உலகளாவிய நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து செயல்பட நினைக்கிறோம்.
வாகனத்துறையில் அடிக்கடி ஏற்படும் பல கொள்கை மாற்றங்களால், முதலீடுகள் ஈர்பதில் சிக்கல் ஏற்படுவது மட்டுமல்லாமல், பங்குதாரர்கள் அதை பின்பற்றுவதையும் கடினமாக்குகிறது.
அதனால், கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றி, எளிமையாக்கினால், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.