Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/சித்ரா...மித்ரா (திருப்பூர்)/ சித்ரா மித்ரா: இல்லாததைச் சொல்ல ' நல்ல ' நேரம் உள்ளதைச் சொன்னால் ' கெட்ட ' காலம்

சித்ரா மித்ரா: இல்லாததைச் சொல்ல ' நல்ல ' நேரம் உள்ளதைச் சொன்னால் ' கெட்ட ' காலம்

சித்ரா மித்ரா: இல்லாததைச் சொல்ல ' நல்ல ' நேரம் உள்ளதைச் சொன்னால் ' கெட்ட ' காலம்

சித்ரா மித்ரா: இல்லாததைச் சொல்ல ' நல்ல ' நேரம் உள்ளதைச் சொன்னால் ' கெட்ட ' காலம்

ADDED : ஜூன் 25, 2024 03:26 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

'மித்து... கள்ளச்சாராயத்துக்கு எதிரா போராட்டம் களைகட்டுதே''

சித்ராவின் குரலைக் கேட்டதும் மித்ரா உற்சாக மானாள்.

''சித்ராக்கா... திருப்பூர்ல குட்கா, கஞ்சா, சட்ட விரோத மதுன்னு குறைஞ்சபாடில்ல... தொழிலாளர் போர்வைல பலரும் குட்கா, கஞ்சா கடத்தி வர்றாங்க...

''எந்த இடத்தில இருந்து கொண்டு வர்றாங்களோ அங்க இருந்து குற்றவாளி களைக் கைது செஞ்சாதான் இதுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

''ஆனா, இதுக்கு அந்தந்த மாவட்ட போலீஸ்ல ஒருங்கிணைப்பு வேணும்... திருப்பூர்ல மட்டும் 'ஏக்ஷன்' எடுத்தா பத்தாது.

''போராட்டங்களின்போது, நம்ம மாவட்டத்துல கள்ளச்சாராயமும் கிடைக்குதுன்னு கோத்து விடுறாங்க... நிஜம்தானான்னு தெரியல''

''மித்து... கிராமங்கள்ல கள்ளச்சாராயம் வித்தா மக்கள் தைரியமா குரல் கொடுக்கணும்... ஆனா, கள்ளச்சாராயம் விக்குறவங்க ரவுடிக்கும்பலை வச்சு மிரட்டிடறாங்க... இதனால 'நமக்கேன் வம்பு'ன்னு ஒதுங்கிடறாங்க... சாமானிய மக்களுக்குப் போராடத் தெம்பு இருக்கறதில்ல''

''நீங்க சொல்றது கரெக்ட்தாங்க்கா... ஆனா, போராட்டம் நடத்துறவங்க போலீசை சும்மா கோத்துவிடாம, இடத்தைக் குறிப்பிட்டு புகாராவே தரலாமே...

''சும்மா வீராவேசமா பேசுறேன்னுட்டு கட்சிக் காரங்க இல்லாததையெல்லாம் கோத்துவிடுறாங்களேன்னு போலீஸ்ல புலம்புறாங்களாம்''

மித்ரா நியாயம் பேசினாள்.

களேபரம் பின்னணி

''சித்ராக்கா... தமிழக அரசைக் கண்டிச்சு பா.ஜ., காரங்க போராட்டத்துல ஏக களேபரம் ஆயிருச்சாம்ல...''

''ஆமா மித்து... மொதல்ல இருந்தே பா.ஜ., காரங்களுக்கும், போலீசுக்கும் அலைவரிசை ஒத்து வரல...''

''அதுக்காக பேனரைக் கொண்டுவரும்போதே பிடுங்கறதெல்லாம் 'டூமச்' தானேக்கா...''

''டூமச்சோ... த்ரீமச்சோ... குண்டக்க... மண்டக்கன்னு நடந்துறப்போகுதுன்னு போலீஸ்ல ஓவர் ரீயேக்ஷன் கொடுத்தா சில சமயம் இப்படித்தான் நடக்குது...''

''கைகலப்பு வரைக்கெல்லாம் போயிருக்கக்கூடாதுக்கா...''

''போலீஸ் - பா.ஜ., காரங்க ரெண்டுதரப்புலயுமே தப்பு இருக்கு... போலீசும், கட்சிக்காரங்களும் எந்தெந்த இடத்துல நிதானமா இருக்கணுமோ அங்க நிதானம் தவறியிருக்கக்கூடாது. போலீஸ்தான் மொதல்ல ஒருத்தரைத் தாக்குனதா பா.ஜ., காரங்க சொல்றாங்க''

''சித்ராக்கா... கடவுளுக்குத்தான் வெளிச்சம். போராட்டம் துவங்குறதுக்கு முன்னாடியே 'மைக் 10' அதிகாரியோட உத்தரவின் பேர்ல, குமரன் சிலை ஏரியாவுல தேவையில்லாம போக்குவரத்தை மாத்தி தடுப்புகளை அமைச்சாங்க...

''பஸ்சுக்கு காத்திருந்த பயணிகள், வாகன ஓட்டிகள் பலரும் சிரமப்பட்டாங்க.

''சிலர் போலீஸ்காரங்க கிட்டயே, 'ஏன் சார்... இன்னும் போராட்டமே ஆரம்பிக்கல... அதுக்குள்ள இப்படிப் பண்றீங்களே'ன்னு ஆதங்கப்பட்டிருக்காங்க''

''நீ சொல்றது சரி மித்து... அதிகாரி காதுக்கு கொண்டு போனதுக்கு அப்புறமாதான், போக்குவரத்தை பழையபடியும் மாத்தியிருக்காங்க''

இது 'பொற்காலம்'

''சித்ராக்கா... திருமுருகன்பூண்டி நகராட்சில ரோடு, குடிநீர் வினியோகம் எதுவும் சரியில்லைன்னு மக்கள் புலம்பறாங்களாம்.

''நகராட்சியானதுக்குப் பதிலா, பேரூராட்சியாவே இருந்திருக்கலாம்ன்னு புலம்புற அளவுக்கு நிலைமை இருக்காம்,''

''மித்து... மக்கள் திண்டாடினாலும், மக்கள் பிரதி நிதிங்க கொண்டாட்டமா இருக்காங்களாம். இது 'பொற்காலம்'ன்னு சொல்ற அளவுக்கு கமிஷன் கரை புரளுதாம். நிறைய பேரு திடீர் பணக்காரங்களா மாறீட்டாங்களாம்...

''தோழர் படையைச் சேர்ந்த ரெண்டு பேர் மட்டும், 'நாங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டோம்'ன்னு ஒதுங்கி இருக்காங்களாம்''

''நீங்க சொல்றதப் பார்த்தா, விஜிலன்ஸ் ரெய்டு போற அளவுக்குள்ள இருக்கு...''

''ஆமாமா மித்து...''

புகார்தாரருக்கே மிரட்டல்

''சித்ராக்கா... உணவுப்பொருள் தரமில்லைன்னு பொதுமக்கள் ஆதாரத்தோட 'வாட்ஸாப் நம்பர்'ல புகார் கொடுக்கலாம்...

''ஆனா ஆய்வு செய்யும்போது, புகார் கொடுத்தவங்க யாருன்னு அப்பட்டமா அதிகாரிங்க சொல்லிடறாங்களாம்.

''புகார் பண்ணுனதை 'ஸ்கிரீன் சாட்' எடுத்து வச்சிட்டு புகார்தாரரையே புகாருக்கு உள்ளானவங்க மிரட்டுறாங்களாம்.

''ஜி.ெஹச்., முன்னாடி ஆய்வு நடத்துனப்ப, புகார்தாரர்கிட்ட ஒரு அமைப்புல இருந்து கூப்பிட்டு பேசியிருக்காங்க. மீன் கடை தொடர்பா புகார் செஞ்சப்ப, புகார் கொடுத்தவர் வீட்டுக்கே ஆட்கள் போயிட்டாங்களாம்...

''புகாரும் கொடுத்துட்டு போலீஸ் பாதுகாப்பு கேட்டு கலெக்டர்கிட்டயும் மனு கொடுக்க வேண்டியிருக்குமோன்னு, புகார்தாரர்கள் புலம்பிட்டு இருக்காங்க... உள்ளதைச் சொன்னால் மன பாரம்தான்க்கா''

''அடப் பாவமே''

அங்கலாய்த்தாள் சித்ரா.

முறைகேடு அம்பலம்

''மித்து... மின் வாரியத்துல புதுசா சில முறைகேடு கள் வெளிச்சத்துக்கு வர ஆரம்பிச்சிருக்கு...

''2000 சதுர அடி அல்லது மூனு வீடுகள் உள்ள கட்டுமான பணி நடந்துச்சுன்னா, 5,500 ரூபாய் டிபாசிட் செலுத்தி, தற்காலிக மின் இணைப்பு வாங்கலாம். இதுக்கு மேல் கட்டினால், 2 கிலோவாட் தற்காலிக இணைப்பு வாங்க, 1.25 லட்சம் ரூபாய் 'டிபாசிட்' செலுத்தணும்.

''அதிக பரப்புல வீடு கட்டுறவங்க, மின்வாரிய அலுவலரை 'கவனிச்சு' 5,500 ரூபாய் டிபாசிட் கட்டி, தற்காலிக மின் இணைப்பு வாங்கிடறாங்க.

''மின்வாரியத்துக்கு இழப்புதான். சில இடங்கள்ல கையும், களவுமா மாட்டி யிருக்கறதால இதுதொடர்பா மேலிடத்துக்கு புகார் பண்ணலாம்னு ஒரு குரூப் வேலை பார்த்துட்டு இருக்காங்க''

''அட... இப்படியெல்லாமா நடக்குது''

சித்ரா சொன்னதைக் கேட்டதும் மித்ரா வியந்தாள்.

''சித்ராக்கா... சமீபத்துல திருப்பூருக்கு மினிஸ்டர் உதயநிதி வந்தார்ல... அதுக்கு முதல் நாள், கோவையில இளைஞரணிப் பொறுப்பாளர்களைச் சந்திச்சுப் பேசுனாராம்.

''திருப்பூர் வடக்கு மாநகர்ல உள்ள இளைஞரணி அமைப்பாளர் உதயநிதிகிட்ட, 'வார்டு பகுதியில் எந்த நிகழ்ச்சி குறித்தும் சொல்றதில்ல; மாநகர் செயலர்ட்ட சொன்னாலும் நடவடிக்கை இல்ல'ன்னு புகார் சொன்னாராம்''

''இதைத் தெரிஞ்சிக்கிட்ட செயலர், உன்னைப் பார்த்துக்கிறேன்... மூனு மாசத்தில காலம் மாறும்; காட்சி மாறும்னு சவால் விட்டாராம்''

போன் ஒலித்தது.

''நம்ம தினேஷ்குமார் அண்ணன்தான்... அப்புறம் பேசிக்கிறேன்''

புன்னகைத்துக்கொண்டே சொன்னாள் மித்ரா.

'சைலண்ட் மோடு'

'மித்து... குண்டடம், ஜோதியம்பட்டில கோவில் இடத்துல மண்ணை வெட்டிக்கடத்துனது தொடர்பா அறநிலையத்துறை அதிகாரிங்க ஆய்வு செஞ்சுருக்காங்க...

''அவங்க விசாரிச்சப்ப, நாங்க மட்டுமா எடுத்தோம்; எங்களை மட்டும் விசாரிக்கறீங்கன்னு சில பேரு சொல்லியிருக்காங்க...

''அதிகாரிகளும் போலீசில் புகார் கொடுக்காம சைலன்ட் மோடில் கிளம்பீட்டாங்களாம்''

''இதுக்குப் பேருதான் அதிரடியா''

சித்ராவிடம் நமுட்டுச் சிரிப்பு எழுந்தது.

''சித்ராக்கா... திருப்பூர் கால்நடை மருத்துவ மனையில் ராத்திரி நேரத்துல டாக்டர்கள் யாரும் இருக்கறதில்ல... வளர்ப்பு பிராணிகள், கால்நடைகளுக்கு ராத்திரில உடல் நலக்குறைவு ஏற்பட்டால் கூட பகல் நேரத்திலதான் கொண்டு செல்ல வேண்டியிருக்கு''

''மித்து... குறைபாட்டை சரிபண்றாங்களான்னு பார்ப்போம்''

''சித்ராக்கா... பல்லடம், திருப்பூர் பஸ் ஸ்டாண்ட்ல ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் ஏர்ஹாரன் பறிமுதல் செய்ற விஷயம் எப்படியோ தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர் காதுக்கு எட்டி 'வாட்ஸாப்'ல பரவீடுதாம்.

''ஏர்ஹாரனை கழட்டி வச்சிட்டு பஸ் ஸ்டாண்டுக்குள்ள வர்றதால, அதிகாரிகள் ஏமாந்து போயிடறாங்களாம்''

''மித்து... 'நான் முதல்வன்' திட்டத்துல பெரும்பாலான மாவட்டத்துல லோக்சபா தேர்தலுக்கு முன்னாடியே வேலைவாய்ப்பு முகாம் நடத்தீட்டாங்களாம்.

''திருப்பூர்ல எல்.ஆர்.ஜி., காலேஜ் ஓட்டு எண்ணிக்கை மையமாக இருந்ததால, வேலைவாய்ப்பு முகாமை முன்கூட்டியே நடத்த முடியல. தாமதமா நடத்துனதால, பதிவு செஞ்ச 83 நிறுவனங்கள்ல 53 தான் கலந்துக்கிச்சாம். மாணவியர் புலம்பறாங்க''

''சரிக்கா... உங்க புலம்பலையும் நிறுத்துங்க... கூலா ஆரஞ்ச் ஜூஸ் குடீங்க''

''இப்பவாவது புரிஞ்சுதே... சீக்கிரம் ஜூைஸக் கொண்டா''

மித்ராவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us