Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/சித்ரா... மித்ரா ( கோவை)/ 10 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயம்!

 10 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயம்!

 10 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயம்!

1


ADDED : ஏப் 28, 2026 10:34 AM

Follow on Google

ADDED : ஏப் 28, 2026 10:34 AM

1


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெளியே வெயில் சுட்டெரிக்க, வீட்டு ஹாலில் ஒரு விவாத நிகழ்ச்சியை டிவியில் பார்த்துக்கொண்டிருந்தாள் மித்ரா.

''என்னா வெயிலு...'' என்றபடி உள்ளே நுழைந்தாள் சித்ரா. எழுந்து சென்று ஜில்லென்று டம்ப்ளரில் மோர் கொண்டு வந்து கொடுத்தாள் மித்ரா.

குடித்து முடித்த சித்ரா, ''ஒரு வழியா எலக்ஷன் முடிஞ்சிருச்சி... யாரு ஜெயிப்பாங்கன்னு ஏதாவது கெஸ் பண்ண முடியுதா மித்து?''

''இந்த எலக்ஷன் ஒரு மார்க்கமாத்தான் நடந்து முடிஞ்சிருக்கு. ஓட்டு கூடுனதுக்கு காரணம் எஸ்.ஐ.ஆரா, விஜய்ங்கற ஸ்டாரான்னுதான் எங்க பார்த்தாலும் பேச்சு,''

''நம்மூர்ல அந்த ஸ்டார் பேர வச்சி கட்சிக்காரங்க நல்லா கல்லா கட்டிட்டாங்கன்னு ஒரு பேச்சு இருக்கே...''

''நானும் அரசல் புரசலா கேள்விப்பட்டேன். நடிகர் கட்சி சார்புல நம்மூர்ல போட்டி போட்ட சில பேரு கட்சி தலைமைக்கும், கோபி நிர்வாகிக்கும் பெரிய தொகை குடுத்துதான் சீட்டை கன்பர்ம் பண்ணுனாங்களாம். குடுத்த தொகையை தேர்தல்லயே வசூல் பண்ணிட்டாங்க''

''இன்ட்ரஸ்டிங்...எப்படி?''

''வடக்கே நின்னவர் சூரிய கட்சிகிட்டயும், தெற்கே நின்னவர் இலை கட்சிகிட்டயும் டீலிங் போட்டு பெரிய கலெக்ஷன் பார்த்துட்டதா சொல்றாங்க''

''பணப்பட்டுவாடாவுல இந்தவாட்டி சூரியகட்சி தாராளமா எறங்குனதுக்கு பயம்தான் காரணம்னு சொல்றாங்களே''

''அப்டித்தான் எடுத்துக்க வேண்டியிருக்கு... சராசரியா ஒரு ஓட்டுக்கு ஆயிரத்துல இருந்து ஐயாயிரம் வரை குடுத்ருக்காங்க. இதுக்கு முன்னாடி நடந்த எலக் ஷன்கள்ல, நம்மூர் உடன்பிறப்புகள் பட்டுவாடாவுல சொதப்புனதால இந்தவாட்டி கரூர்காரங்க களத்துல வெளயாடுனாங்க. அ.தி.மு.க.,காரங்க பிரச்னைய பெரிசாக்குனதால ஒரு கட்டத்துல 'ஆப்' ஆயிட்டாங்க. இதான் சான்சுன்னு உள்ளூர் உடன்பிறப்புகள் பட்டுவாடா பணத்தை பாக்கெட்ல போட்டுக்கிட்டாங்களாம்''

''கரூர்காரருக்கு இது எப்டி தெரியாம போச்சு?''

''அவருக்கு தெரியாம இருக்குமா...ராமநாதபுரம் ஓட்டுச்சாவடி ஏரியாவுல அவர் போனப்போ லேடீஸ் சிலபேரு சுத்திட்டாங்களாம். 'எங்க வீடுகளுக்கு பணம் வரலை'ன்னு சொல்லியிருக்காங்க. அவர் டென்ஷனாயிட்டாராம்''

''அப்புறம்?''

''கட்சிக்காரங்களை கூப்ட்டு 'வார்ன்' பண்ணி, கம்ப்ளையின்ட் பண்ணுன லேடீசுக்கு ஒடனே பணம் குடுக்க ஏற்பாடு செஞ்சிருக்காரு. பட்டுவாடா பணத்துல கைவச்ச கட்சிக்காரங்களுக்கு கவுன்டிங் முடிஞ்சதும் 'லாடம்' கட்டப்போறாராம்,''

''மேட்டுப்பாளையம் ஏரியாவுலயும் கரூர் டீம் கலக்குச்சாமே...''

''கேள்விப்பட்டேன். ஆளுங்கட்சி சார்புல ஓட்டுக்கு ரெண்டாயிரம் குடுத்ருக்காங்க. லோக்கல் உடன்பிறப்புகளை நம்பாம கரூர் டீமே கவனிச்சிக்கிட்டதால, கட்சியில உள்ள உடன்பிறப்புக பலபேரு உர்னு இருக்காங்க''

''அங்க இலை கட்சி ஒன்னும் குடுக்கலையா?''

''அவங்களால மேட்டுப்பாளையம் நகர் பகுதியில குடுக்க முடியலை. வில்லேஜ் ஏரியா முழுசும் கவர் பண்ணிட்டாங்க. சில எடங்கள்ல உடன்பிறப்புங்க தடுத்தாங்க. பிளையிங் ஸ்குவாடு பேர சொல்லி துட்டை மறைச்சிட்டாங்களாம். இதனால கட்சி சீனியர்ங்க சோகமாத்தான் இருக்காங்க''

''காங்கிரஸ் கமுக்கமா இருக்கற மாதிரி இருக்கே...எதாச்சும் வெவகாரமா?''

''இந்தவாட்டி யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு, நம்ம மாவட்டத்துல அவங்களுக்கு ரெண்டு தொகுதி குடுத்தாங்க. பழைய ஆளுகள கண்டுக்காம, சின்ன வயசுக்காரங்களுக்கு சான்ஸ் குடுத்தாங்க. அதான் பரவால்லனு பார்த்தா, கூட்டணித் தலைமையும் 'கவனிக்க'லயாம்''.

''ஒவ்வொருத்தரும் தனித்தனி கோஷ்டியா சண்டை போட்டுக்கிட்டாங்க. மாநகர மாவட்டம் மட்டும், பழைய அமைச்சர்கிட்ட ஒட்டிக்கிட்டார். மத்தவங்கள யாரும் மதிக்கல. அதனால ஓட்டுக்கேட்டு வரமாட்டோம். எங்க சமூகத்துக்கு வாய்ப்புத் தரல. யாரும் எங்கள கூப்ட்டு பேசலனு தினம் ஒரு பஞ்சாயத்து பண்ணிருக்காங்க''

''கூட்டணி தலைமை ரியாக்ஷன் என்ன?''

''கம்னு இருந்தா எலெக்ஷன ஜம்முனு முடிக்கலாம்னு பக்காவா பிளான் பண்ணி அவங்க அமைதியாயிட்டாங்க. அதனால எதுவுமே தேறலனு காங். கோஷ்டிக கடுப்புல இருக்காங்க. எலக்ஷன் முடிவு வரட்டும்னு காத்திருக்காங்களாம்,''

''எலக்ஷன் முடிஞ்சதும் தி.மு.க., தரப்புல தடபுடலா கறி விருந்து நடந்துச்சாமே...''

''அதுவா... ஓட்டுப்பதிவு முடிஞ்ச மறுநாள், தெற்கு தொகுதியில பூத் ஏஜன்ட்டா இருந்தவங்க, வார்டு இன்சார்ஜ், பகுதி கழக செயலாளர்களை ரேஸ்கோர்ஸ்ல இருக்கற தன்னோட வீட்டுக்கு செந்தில்பாலாஜி கூப்ட்ருக்காரு... ஒவ்வொருத்தரையும் தனித்தனியா 'மீட்' பண்ணி, எவ்ளோ ஓட்டு கிடைக்கும்னு கேட்ருக்காரு,''

''எவ்வளவு சொன்னாங்களாம்?''

''ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நம்பர் சொல்லியிருக்காங்க. இதுக்கு முன்னால சொன்னதை விட குறைவா சொன்னவங்கள்ட்ட, இதுக்கு முன்னாடி இவ்ளோ ஓட்டு கிடைக்கும்னு சொன்னீங்க, இப்போ ஏன் விழலேன்னு கேட்டு துளைச்சி எடுத்ருக்காரு. செம டோஸ் விழுந்திருக்கு...''

''அப்ப கறி விருந்து நடந்துச்சா இல்லையா''

''அதுக்கப்புறம்... எல்லாருக்கும் நான்வெஜ் விருந்து குடுத்ருக்காரு. பூத் வாரியா தி.மு.க.வுக்கு எவ்ளோ ஓட்டு கிடைக்கும்னு கணக்குப் போட்டு பார்த்திருக்காங்க. பத்தாயிரத்து மூன்னுாத்தி நாப்பது ஓட்டு வித்தியாசத்துல ஜெயிக்கிறது உறுதின்னு அவருக்கு குளோசா உள்ளவங்க சொன்ன பெறகுதான் தெம்பாயிருக்காரு''

''கோட்டையில ஓட்டை விழாதுன்னு, அ.தி.மு.க.,வும் கான்பிடன்டா இருக்காங்களாமே''

''ஆமா. இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி ஓட்டு திசை மாறி போயிருக்க வாய்ப்பே இல்லை. கெம்பட்டி காலனியில சானிட்டரி ஒர்க்கர்சுக்கு வீடு கட்டிக் குடுத்தது, அம்மன் குளத்துல இருக்கறவங்களுக்கு பட்டா வாங்கிக் குடுத்தது 'அம்மன்'ங்கிறதுனால, ஓட்டு பிரிய வாய்ப்பில்ல. விஜய் கட்சி தி.மு.க. ஓட்டு வங்கியைதான் பிரிச்சிருக்கும்னு நம்புறாங்க''

''அதெல்லாம் சரி... கரூர்காரரு ரேஸ்கோர்ஸ்ல எதுக்கு வீடு பார்த்து குடி வந்திருக்காரு...''

''கலெக்டர் வீடு, ஐ.ஜி. வீடு, ஜட்ஜ் வீடுன்னு எல்லா முக்கியஸ்தர் வீடும் ரேஸ்கோர்ஸ்லதான் இருக்கு. மறுபடியும் ஆட்சிக்கு வந்தா கட்டாயம் மினிஸ்டர் போஸ்ட் கரூர்காரருக்கு கிடைச்சிரும். நம்மூருக்கு அவருதான் அதிகார மையமா இருப்பாரு. அ.தி.மு.க. ஆட்சியில குனியமுத்துாருக்கு படையெடுத்த ஆபீசர்சை, இனி ரேஸ்கோர்ஸ்சுக்கு வரவைக்கிற பிளான்''

''எலக்ஷன் பத்தி பேசி போதும் போதும்னு ஆயிருச்சு...வேற தகவல் ஏதும் இருக்கா?''

''இருக்கே...நம்ம ஜி.எச்.,ல சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ., எடுக்க புரோக்கர்களை கான்டாக்ட் பண்ண வேண்டாம்னு போர்டு வச்சிருக்காங்க. ஆனாலும் அங்க வேலை பார்க்கற ஒப்பந்த பணியாளர்ங்க சிலபேரு, நோயாளிங்க அவசரத்தை பயன்படுத்தி, ஒரு ரிப்போர்ட்டுக்கு இருநுாறு ரூபா வரை கேக்றாங்க''

''ஆஸ்பத்திரி நிர்வாகம் வேடிக்கை பாக்குதா?''

''அவங்களுக்கு விஷயம் தெரியும். யாராச்சும் கம்ப்ளையின்ட் குடுப்பாங்கன்னு வெயிட் பண்றாங்க. ஜனங்க ரிப்போர்ட்டை எப்டியாச்சும் சீக்ரம் வாங்குனா போதும்னு கம்ப்ளையின்ட் பண்றதில்லை. மொத்தத்துல அங்க லஞ்சப் பேயி மூலைக்கு மூலை ஜிங்கு ஜிங்குனு ஆடுது,''

இருவரும் சேர்த்து சிரித்தபடி எழுந்தார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap