Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/சித்ரா... மித்ரா ( கோவை)/ சீட் கிடைக்கணும்னா இதுதான் பார்முலா!

 சீட் கிடைக்கணும்னா இதுதான் பார்முலா!

 சீட் கிடைக்கணும்னா இதுதான் பார்முலா!


ADDED : மார் 10, 2026 04:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 04:40 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

''இ ப்பவே இந்த வெயில்னா, அடுத்த மாசம் கேக்கவே வேணாம்,'' என்றபடி வீட்டுக்குள் நுழைந்தாள் மித்ரா.

ஜில் மோர் கொடுத்து 'கூல்' படுத்தினாள் சித்ரா. சோபாவில் சாய்ந்தபடி, ''சி.எம்.பிறந்தநாள தடபுடலா கொண்டாட போறாங்களாம். வீட்டுக்கு வீடு டோக்கன் கொடுக்க போறாங்க. அ.தி.மு.க. குடுத்ததை விட டபுளா இருக்குமாம். ஆவலோட காத்துகிட்டு இருக்காங்க, நிர்வாகிகள்'' என்றாள் மித்ரா.

அதற்கு சித்ரா, ''தெற்கு, சிங்காநல்லுார், கிணத்துக்கடவு, கவுண்டம்பாளையம் தொகுதிகளை குறிவச்சு, இளைஞரணி நிர்வாகிங்க மனு குடுத்துருக்காங்க. அ.தி.மு.க.வுல இருந்து தி.மு.க.வுக்கு வந்த முன்னாள் எம்.எல்.ஏ. சின்னசாமியும் மனு குடுத்தத பார்த்து, சீனியர்ஸ் டென்ஷன் ஆகிட்டாங்களாம்''

''டென்ஷன் ஆகலைனாதான் ஆச்சரியம். இத கேளு...மாநகராட்சி வடக்கு மண்டலத்துல முன்னால வேலை பார்த்த லேடி ஆபீசர், சரவணம்பட்டியில இருக்கற பூங்கா இடத்தை மனை வரன்முறை செஞ்சு குடுத்துட்டதா சமூக ஆர்வலர்கள் கம்ப்ளைன்ட் அனுப்பி இருக்காங்க,''

''அப்புறம்...?''

அது சம்பந்தமா 'என்கொயரி' நடத்தி ஆக்சன் எடுக்கச் சொல்லி, கார்ப்பரேஷன் கமிஷனருக்கு மேலிடத்து லெட்டர் வந்திருக்கு. ஆனா ஆபீசர்ஸ் கண்டுக்கவே இல்லையாம். அந்த லேடி, தலைமை பதவிய பிடிக்கறதுக்கு பெருசா டீல் பேசிட்டு இருக்காங்களாம்,'' என்றாள் மித்ரா.

''கவுண்டம்பாளையம் தொகுதில நிக்கிறதுக்கு உள்ளாட்சிக்காரர் ஒருத்தர் அறிவாலயத்துல 25 ஆயிரம் கட்டி விருப்ப மனு குடுத்துருக்காரு. அப்புறம் அங்க இருந்த சீனியர்கிட்ட, சீட் கிடைக்கணும்னா என்ன செய்யணும்னு விசாரிச்சிருக்காரு..''

''யார்ட்ட சிபாரிசுக்கு போக சொன்னாங்களாம்..?''

''சிபாரிசாவது ஒன்னாவது... எவ்ள செலவு செய்ய முடியும்னு இன்டர்வியூல கேப்பாங்க. '20சி ரெடியா இருக்குங்க; இப்பவே தரேன்'னு சொல்லுய்யா, கட்டாயம் சீட் கிடைக்கும்'னு சொல்லிருக்காங்க. கேட்டவரு, அடுத்த பஸ்ல ஊருக்கு திரும்பிட்டாராம்'' என்று கூறி சிரித்தாள். மித்ராவும் சேர்ந்து சிரித்தாள்.

''காந்திபுரம் ஏரியா பிரைமரி ெஹல்த் சென்டர்ல ஒரு டாக்டர், பேஷன்ட்சை மரியாதை இல்லாம பேசுறாரு, நர்சுங்ககிட்ட கடுகடுன்னு நடந்துக்கிறாரு, ரிக்கார்ட தூக்கி முகத்துல வீசுறாருன்னு நிறைய கம்ப்ளைன்ட்,'' என்றாள் சித்ரா.

''கேள்விப்பட்டேன்க்கா. சொந்த கிளினிக்கை கவனிக்க வசதியா காலைல 11-12 மணிக்கு வந்துட்டு 3 மணிக்கே கிளம்பிடுவாராம்'' என்றாள் மித்ரா.

''ரன்னிங் லைசென்ஸ்ங்கற பேர்ல, கார்ப்பரேஷன் ெஹல்த் இன்ஸ்பெக்டர்ஸ் சில பேரு வசூல் வேட்டை நடத்தறாங்கனு பேசினோமே. அதுல ஒருத்தர வெள்ளலூர் குப்பை கிடங்குக்கு மாத்திட்டாங்க,'' என்றாள் சித்ரா.

''வெரிகுட்'' கைதட்டினாள் மித்ரா.

''இத கேளு...மேட்டுப்பாளையம் ஏரியா ஊராட்சிகள்ல, ஆளுங்கட்சி சப்போர்ட் ரியல் எஸ்டேட் கம்பெனியும், பழைய ஊராட்சி தலைவரும் கூட்டு பட்டா எடங்கள வளைச்சு போட்டு கூடுதல் விலைக்கு விக்கிறாங்க. தேர்தல் நேரத்துல யாராச்சும் பிரச்னை கிளப்பினா, கட்சிக்கு கெட்ட பேர்னு உ.பி.க் கள் பெருமூச்சு விடுறாங்க,'' என்றாள் சித்ரா.

''இப்ப ரொம்ப நல்ல பேர் இருக்குதாமா...?'' என்று மித்ரா கமென்ட் அடிக்க, இருவரும் வாய்விட்டு சிரித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us