'ஆமை புகுந்த வீடு...' அட, அத விடுங்கப்பா!
'ஆமை புகுந்த வீடு...' அட, அத விடுங்கப்பா!
'ஆமை புகுந்த வீடு...' அட, அத விடுங்கப்பா!
ADDED : ஜூலை 27, 2024 12:05 PM

''ஆமை புகுந்த வீடு-ங்கற பழமொழியே மாறிப்போச்சு. இதுலயும், ' ரெட் இயர் கிரீன் டர்ட்டில்'ஸ, பொடுசுகள் விரும்பி வாங்கிட்டு போறாங்க,'' என்கிறார், கோவை ஏஞ்சல் அக்வாரியம் ஓனர் சுரேஷ். 'டர்ட்டில்'ஸ்லாம் வீட்டுல வளர்க்குறாங்களா--னு கேட்டதற்கு, அதை ஆமோதிப்பது போல தலையசைத்து பேச தொடங்கினார்.
அக்குவாரியம்ல, குறிப்பிட்ட சில டர்ட்டில் வெரைட்டி விக்கிறதுக்கு பர்மிஷன் இருக்குது. இதை வீட்டுல வளர்க்கலாம். காது மட்டும் சிவப்பு கலர்ல இருக்கறதால தான்,இந்த வெரைட்டிக்கு,'ரெட் இயர் கிரீன் டர்ட்டில்'-னு பேரு வந்துச்சு. பொறந்து மூணு மாசம் ஆன,ஒரு குட்டி டர்ட்டில் விலை வெறும், 600 ரூபாய் தான்.
கண்ணாடி பவுல்ல கூட போட்டு வளர்க்கலாம். தினமும் காலையில, சாய்ந்தரம் சூரிய வெளிச்சத்துல காட்டணும். இதுக்கு விட்டமின்-டி கிடைச்சுட்டா, நோய் எதுவும் வராது. ஆரம்பத்துல, கையில எடுத்து பழக்கப்படுத்திட்டா, உணவு கொடுக்கும் போது, தானாவே கையில ஏறி வந்து
சாப்பிட்டுக்கும். தேவையில்லாம சத்தம் போடாது. வீட்டுல தனியா இருக்கறவங்க, டர்ட்டில் வளர்க்கலாம். ஓனரோடஅட்டாச் ஆன பிறகு,வெளியில விட்டாலும்,வீட்டையே சுத்தி சுத்தி வரும்.