ADDED : மே 16, 2026 06:42 AM

நா ய், பூனை மட்டுமல்ல, ஒட்டகம், குதிரை, ஆடு, புங்கனுார் குட்டை மாடு, மீன் என, நிறைய வெரைட்டி செல்லப்பிராணிகளை கொஞ்சவும், ரசிக்கவும், கோவையில் வரும் 23,24ல், செல்லப்பிராணி திருவிழாவை, நடத்துகிறது 'ஐபாஸ்'(IPAWS) அமைப்பு.
சரவணம்பட்டி, புரோசோன் மாலில், வரும் 23, 24 ஆகிய இரு நாட்களும், ஐபாஸ் அமைப்பு சார்பில், 2வது செல்லப்பிராணி திருவிழா நடக்கிறது. இதில், 23ம் தேதி, சர்வதேச பூனை கண்காட்சி, நாய் கண்காட்சி நடப்பதால், உங்கள் செல்லங்களை அழகுப்படுத்தி ஆஜராகிடுங்க. பார்வையாளர்களை கவர மேஜிக் ஷோ, குட்டீஸ்களுக்கு ஓவியப்போட்டியுடன், நாய்களை எப்படி வளர்ப்பது, அதன் ஆரோக்கியம் குறித்து கால்நடை மருத்துவர்கள் கலந்துரையாடுகின்றனர்.
அடுத்தநாளான 24ம் தேதி, ஒபீடியன்ஸ் டாக் ஷோ மற்றும் ஷேமீக் கே 9 கென்னலின் பப்பிகளுக்கான சுறுசுறுப்பு, கீழ்படிதலுக்கான தொழில்முறை பயிற்சி நடக்கிறது. இதில் இந்தியாவின் ஒபீடியன்ஸ் சாம்பியன் பப்பியை காணலாம். இத்துடன், புளோரான், கப்பீஸ், பீட்டா இன மீன்களுக்கான பிரத்யேக கண்காட்சி போட்டி, குதிரை, ஒட்டகம், புங்கனுார் குட்டை மாடு, ஆடுகளின் அணிவகுப்பை ரசிக்கலாம். சிறந்த பூனைக்கும், கண்காட்சியில் சிறப்பாக பங்களித்த செல்லப்பிராணிக்கும் பரிசு உறுதி.
கேம்ஸ் ஜோனில் குட்டீஸ்களை பிசியாக்கிவிட்டு, டாட்டூ, மெஹந்தி ப்ரீயாக போட்டு கொள்ளலாம். இதில் உங்கள் செல்லப்பிராணியும் பங்கேற்க விரும்புவோர், 98422 30865 என்ற எண்ணிலும், www.ipaws.co இணையதளத்திலும் தொடர்பு கொள்ளலாம் என, விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
