Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/செல்லமே/ 'பெட்' தேர்வு விழிப்புணர்வு; இந்தியாவில் குறைவு!

'பெட்' தேர்வு விழிப்புணர்வு; இந்தியாவில் குறைவு!

'பெட்' தேர்வு விழிப்புணர்வு; இந்தியாவில் குறைவு!

'பெட்' தேர்வு விழிப்புணர்வு; இந்தியாவில் குறைவு!

ADDED : செப் 06, 2025 08:17 AM


Google News
Latest Tamil News
''நா ய் கண்காட்சி நடத்துவதன் வாயிலாக குறிப்பிட்ட இனத்தை பிரபலப்படுத்துவதோடு அதை அழியாமல் பாதுகாக்க முடியும்,'' என்கிறார், 'மெட்ராஸ் கெனைன் கிளப்' செயலாளர் சித்தார்த்தா சுதர்சன்.

அவருடன் ஒரு பேட்டி:

நாய் கண்காட்சி நடத்துவதன் நோக்கம்?



உலகில், 340க்கும் மேற்பட்ட நாய் இனங்கள் உள்ளன. இவற்றை, மனிதர்கள் தங்கள் தேவைக்காக பயன்படுத்த தொடங்கிய காலம் முதல், அதன் சில ஆக்ரோஷமான குணாதிசயங்களை மாற்றி இனப்பெருக்கம் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு இனத்துக்கும் தனித்தனி உடல்வாகு, ஆற்றல் உண்டு. முறையாக பராமரித்து ஆரோக்கியமான பப்பிகளை உருவாக்குவது, தனித்திறன் வளர்த்து பிரபலப்படுத்துவதுதான் நாய் கண்காட்சியின நோக்கம். கண்காட்சி வாயிலாக நல்ல திறன் கொண்ட நாய்களை இனப்பெருக்கம் செய்த ப்ரீடரை அடையாளப்படுத்துவது; பயிற்சியின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

மெட்ராஸ் கெனைன் கிளப் பற்றி...



மெட்ராஸ் கெனைன் கிளப் தென்மாநில அளவில் முன்னணி கிளப். தமிழக அளவில் முதலில் உருவாக்கப்பட்டதும் கூட. கடந்த, 1976 ல், பல முன்னணி தொழிலதிபர்கள், விலங்கு ஆர்வலர்களால் ஏற்படுத்தப்பட்டது. இதுவரை, 145 கண்காட்சிகள் நடத்தி உள்ளோம். சர்வதேச கண்காட்சிகளும் இதில் அடக்கம்.

சாம்பியன் பட்டம் பெறும் பப்பிக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்ன?



நல்ல உடல்திறன், முறையாக பயிற்சி பெற்ற பப்பிகள் தான் கண்காட்சியில் பங்கேற்கின்றன. போட்டியில் பங்கேற்கும் நாய்கள் பிறரை கடிக்க கூடாது. நடுவரின் உத்தரவுக்கு கீழ்படிய வேண்டுமென்ற சில விதிமுறைகளும் உள்ளன. இத்தகுதிக்குட்டப்பட்ட நாய்களே களமிறங்குவதால் தனி கவனம் பெறும்.

போட்டியில் வெற்றி பெற்றால் ப்ரீடருக்கு பெருமை. அவரிடம் பப்பி வாங்க பலரும் விரும்புவர். புதிதாக பப்பி வாங்க நினைப்போர் கண்காட்சிக்கு வந்தால் தெளிவு படுத்திக்கொள்ள இயலும். செல்லப்பிராணியாக மட்டுமல்லாமல், காவல், ரோந்து, துப்பறிதலுக்கான பப்பிகளை வாங்கிடவும் வாய்ப்புகள் உண்டு.

வெளிநாட்டு கண்காட்சிகளுடன் ஒப்பிட முடியுமா



இந்தியாவில் செல்லப்பிராணிகளுக்கான சந்தை விரிவடைந்துள்ளது. இங்கே நல்ல தகுதியான பப்பிகளை இனப்பெருக்கம் செய்ய, பயிற்சி அளிக்க அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வெளிநாடுகளில் கண்காட்சிகளை உள்ளரங்கத்தில் நடத்துகின்றனர். நம்மிடம் அதற்கான கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதனால், பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்ப குறிப்பிட்ட சில மாதங்களில் மட்டும் தான் இங்கு கண்காட்சி நடத்த முடிகிறது. மற்றபடி பெரிய வித்தியாசம் இல்லை.

ஆனால், செல்லப்பிராணி வளர்ப்பில் நாம் சில விஷயங்களில் பின்தங்கியிருக்கிறோம். எந்த இன பப்பி, எந்த தேவைக்காக வாங்க வேண்டுமென்ற புரிதல் இங்குள்ளோருக்கு குறைவு. இந்த விழிப்புணர்வை, பப்பி வாங்க வருவோரிடம், ப்ரீடர்கள்தான் ஏற்படுத்த வேண்டும், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us