
கர்ணம்
இப்புறாவின் தனிச்சிறப்பே வானத்தில் உயரே பறந்து, உடனே பல்டி அடிப்பது தான். அக்காட்சியை பார்க்கவே பிரமிப்பாக இருக்கும். நடிகர் தனுஷ் நடித்த 'மாரி' திரைப்படத்தில், கர்ணம் புறா பல்டி அடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். இது, உரிமையாளருடன் எளிதில் நெருங்கிவிடும்.
லக்கான்
லக்கான் வகை புறா, மயில் போலவே, இறக்கையை விரிக்கும். இதில், இந்திய வகை புறா, சற்று சிறியதாகவும், அமெரிக்கா நாட்டை சேர்ந்த லக்கான் புறா, அளவில் பெரியதாகவும் இருக்கும். அதிக உயரம் பறக்காது. இது இறக்கை விரிக்கும் அழகே தனிதான். இதில், நிறைய நிறங்கள் இருக்கின்றன.
முஸ்கி
இதன் தலையில் மட்டும் வெள்ளை நிறத்தில் கோடு இருக்கும். தலையின் மேல் 'ஸ்பைக்' போன்ற கொண்டையுடன், கழுத்தை மட்டும் அசைத்து கொண்டே இருக்கும். இதை 'ஷேக்கிங் நெக்' என செல்லமாக அழைப்பர். சின்னதாக விசில் அடித்தாலே, கையில் வந்து உட்காரும்.
கட்டை மூக்கு
மதுரையில் தான் இந்த வகை புறாக்களை அதிகம் காணலாம். இதன் மூக்கு, சிறியதாக கட்டையாக இருக்கும். கண்ணை சுற்றி வளையம் போல, தசை இருக்கும். முகம் சிறியதாக, வித்தியாசமான தோற்றத்தில் காணப்படும்.
ரோமர்
கோவில் புறாக்களில் இருந்து இனப்பெருக்கம் செய்யப்பட்டது தான் இந்த, 'ரேசிங்' ரோமர் புறா. இது புத்திசாலியானது. சிறியதாக இருக்கும் போதே வளர்த்தால், வளரும் இடத்தை அடையாளம் கண்டு கொள்ளும். இதற்கு பயிற்சி அளித்தால், எவ்வளவு துாரம் பறந்து சென்றாலும், மீண்டும் வீட்டை வந்தடைந்துவிடும். இதில் நிறைய வெரைட்டி இருக்கின்றன.