Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/செல்லமே/எனது 'டைமண்ட்' ஒரு 'ஸ்ட்ரஸ் பஸ்டர்'

எனது 'டைமண்ட்' ஒரு 'ஸ்ட்ரஸ் பஸ்டர்'

எனது 'டைமண்ட்' ஒரு 'ஸ்ட்ரஸ் பஸ்டர்'

எனது 'டைமண்ட்' ஒரு 'ஸ்ட்ரஸ் பஸ்டர்'

ADDED : ஜன 02, 2024 02:20 PM


Google News
Latest Tamil News

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டியை சேர்ந்தவர் கணேஷ் ராமலிங்கம். இவர், 'ஜெர்மன் ஸ்பிட்ஸ்' என்ற உயர்ரக நாயை வளர்த்து வருகிறார். அவர் கூறுகையில், ''பல தனியார் கம்பெனிகளுக்கு ஆலோசகராக பணிபுரிந்து வருகிறேன். கடந்த 7 ஆண்டுகளாக செல்ல நாயை வளர்த்து வருகிறேன். அதற்கு 'டைமண்ட்' என பெயர் வைத்துள்ளேன்.

இதை ஒரு 'ஸ்ட்ரஸ் பஸ்டர்' என்று கூட கூறுவேன். காரணம், பணிக்கு சென்று திரும்பி வந்தவுடன், எத்தகைய மன அழுத்தம் இருந்தாலும், இதனுடன் விளையாடினால் போதும்; மனம் லேசாகும். நாம் அன்புடன் பயிற்சி அளித்தால், அனைத்து பணிகளையும் கீழ் படிதலுடன் செய்யும். நாம் உணவு வைத்து விட்டு, அதை உட்கொள்ள 'கமென்ட்' செய்யும் வரை அப்படியே நிற்கும். இதை பிரிந்து என்னால் இருக்க முடியாது; அவ்வளவு பிடிக்கும்,'' என்றார்.