மெய்ன்கூன்... வேற மாதிரி!: ஓனருக்கு சேவகனாகும்
மெய்ன்கூன்... வேற மாதிரி!: ஓனருக்கு சேவகனாகும்
மெய்ன்கூன்... வேற மாதிரி!: ஓனருக்கு சேவகனாகும்
ADDED : ஜூலை 06, 2024 09:20 AM

இந்தியால இருக்கற பெட்ஸ் வெரைட்டில, லார்ஜஸ்ட் மியாவ்னா மெய்ன்கூன் தான். இந்த ப்ரீட்க்குன்னு, ஊட்டில 'வேங்கை அறம்'-ங்கற பேர்ல பெரிய பூனை பண்ணை இருக்கறதா கேள்விப்பட்டதும், அதோட உரிமையாளர்கள் சரவணன் மற்றும் டாக்டர். ஷாகீர்கானை தொடர்பு கொண்டோம்.
நம்மோடு பகிர்ந்தவை: சிறுத்தை மாதிரி முகம், சிங்கத்தோட பிடறி, ராஜகம்பீர நடை தான், மெய்ன்கூனோட யுனிக்னெஸ். இது, பிளாக், ஆரஞ்ச், ஒயிட் கலர் காமினேஷன்ல தான் அதிகமா பொறக்கும். இதுல ஏதாவது ரெண்டு கலர் கலந்துருந்தா, அது 'பீமேல்' மியாவ்-னு தெரிஞ்சிக்கலாம்.
இதோட பிறப்பிடம், அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா நாடுகள். இதுல, ரஷ்யால பொறக்கற ப்ரீட்ஸ் தான், லார்ஜா வளரும். எங்க பண்ணையில, 24 மெய்ன்கூன்ஸ் இருக்குது. 40 மியாவ்ஸ் சேல் பண்ணியிருக்கோம்.
மெய்ன்கூனோட முழுமையான வளர்ச்சி, ஐந்து வயசு வரைக்கும் இருக்கும். நல்லா மெயின்டெய்ன் பண்ணா, அதிகபட்சமா 32 வருஷம் வரைக்கும் வாழும். இதுக்கு தடுப்பூசி போடுறது, குடல்புழு நீக்கம் செய்றது அவசியம்.
வாரத்துக்கு ஒருமுறை குளிப்பாட்டி விடுறது, நகம் வெட்டி, காது சுத்தம் பண்றது, டெய்லி குரூமிங் பண்றது அவசியம்.
மத்த வெரைட்டி ப்ரீட்ஸ் மாதிரி இல்லாம, மெய்ன்கூன் சமத்தா நடந்துக்கும். தேவையில்லாம சத்தமே போடாது. அபார்ட்மெண்ட்ல இருக்கறவங்களுக்கு, இந்த ப்ரீட் பெஸ்ட் சாய்ஸ்.
பொதுவா ஒரு வீட்டுல பூனை இருந்தா அதுதான் எஜமான் மாதிரி நடந்துக்கும். ஓனர் அதுக்கு சேவகம் பண்ணணும்னு எதிர்பார்க்கும். ஆனா, மெய்ன்கூன் கொஞ்சம் வித்தியாசமானது. ஓனரோட ஈஸியா அட்டாச் ஆகி, தானாவே வந்து கொஞ்சி விளையாடும்.
பூனையோட ஒவ்வொரு ஸ்டேஜ்லயும், வெவ்வேற மாதிரியான நியூட்ரீஷியன்ஸ் தேவைப்படும். இதை ஓனர் புரிஞ்சிக்கிட்டு, அதுக்கேத்த மாதிரியான புட் கொடுக்கணும். குறிப்பா, மகப்பேறு, டெலிவரி சமயங்கள்ல, ஹெல்தியான புட் கொடுக்கறது அவசியம். எங்ககிட்ட மியாவ்ஸ் வாங்குறவங்களுக்கு, இதுபத்தி கவுன்சிலிங் கொடுக்குறோம். நாங்களே, 'வேங்கை அறம்' பேருல, 'மீட் புட்' ரெடி பண்ணி கொடுக்குறோம்.
பூனை வளர்க்கறவங்க, ட்ரை ப்ரூட்ஸ், அரிசி, தானிய உணவுகளை சாப்பிட கொடுக்கக்கூடாது. இதேமாதிரி, சுத்தமான தண்ணீர் அதோட பவுல்ல இருக்கறதை அடிக்கடி செக் பண்ணணும்.
மெய்ன்கூன் ப்ரீட் ரொம்ப இன்டெலிஜென்ட். வீட்டை விட்டு வெளியே போயிட்டாலும், அதோட 'லிட்டர்மேட்'ல இருந்து வர்ற யூரின் ஸ்மெல் வச்சி, 200 மீட்டர் தாண்டி ஓடிட்டா கூட, தானாவே வீடு வந்து சேர்ந்துடும்.