Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/செல்லமே/குடும்பத்தில் அனைவருக்கும் 'ஓகே' வா? அப்ப வாங்கிடுங்க!

குடும்பத்தில் அனைவருக்கும் 'ஓகே' வா? அப்ப வாங்கிடுங்க!

குடும்பத்தில் அனைவருக்கும் 'ஓகே' வா? அப்ப வாங்கிடுங்க!

குடும்பத்தில் அனைவருக்கும் 'ஓகே' வா? அப்ப வாங்கிடுங்க!

ADDED : மே 18, 2025 12:34 PM


Google News
Latest Tamil News
சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற பெருநகரங்களில் அபார்ட்மென்ட் குடியிருப்புகளிலும் செல்லப்பிராணி வளர்ப்பது அதிகரித்து இருக்கிறது. அவர்கள் எந்த மாதிரியான பப்பிவாங்கலாம் என்பது குறித்து சென்னையைச் சேர்ந்த மதன் கூறியதாவது:

செல்லப்பிராணி வளர்க்க, தனி வீடு இருந்தால் நன்றாக இருக்கும். அவை விளையாட, வெளியில் அழைத்துச் செல்ல எவ்வித சிரமமும் இருக்காது. அபார்ட்மென்ட்டாக இருந்தால், அறைகளில் மட்டுமே விளையாட, நடமாட முடியும் என்பதால்,வெளிநாட்டு ரகசிறிய வகைபப்பியே சிறந்தது.டாய்பூடுல், மால்தீவ், பீகல், பக் போன்றவைவளர்க்கலாம். இவற்றின் விலை,5 ஆயிரம் முதல் லட்சம் ரூபாய் வரை கூட இருக்கிறது.இவ்வகை பப்பிக்குமுடி அதிகம் உதிராது. ஆஸ்துமா நோயாளிகள் கூட வளர்க்கலாம். உருவத்தில் சிறியதாக இருப்பதால் சிறிய ஓபன் பைகளில் எடுத்துச் செல்லலாம்.

வீட்டில் பப்பி வளர்ப்பது என முடிவெடுத்துவிட்டால்,அதற்கு வீட்டிலிருக்கும் அனைவரின் இசைவும் அவசியம். இல்லாவிட்டால், வாங்கிய பின் வீட்டிலிருக்கும் யாராவது ஒருவரின் வெறுப்பிற்குள்ளாகி,அவை துன்பப்பட நேரிடலாம். பப்பிகளை குழந்தை போல பாசத்துடன் பராமரிக்க வேண்டும். அப்போதுதான், நம்மிடம் நன்றியுணர்வுடன் பழகும். ஒரு சிலர் ஆசைக்கு வாங்கிவிட்டு சில நாட்களிலேயே அவற்றின் மீது எரிச்சலை காட்டத்துவங்கிவிடுவர்; இது சரியல்ல. பப்பி வளர்ப்பு குறித்த சந்தேங்களுக்கு,89391 35857 என்ற எண்ணில் எம்மைத் தொடர்பு கொள்ளலாம், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us