ஒரு 'ஜோடி'க்காக கடல் கடந்தும் போவேன்!
ஒரு 'ஜோடி'க்காக கடல் கடந்தும் போவேன்!
ஒரு 'ஜோடி'க்காக கடல் கடந்தும் போவேன்!
ADDED : ஜூன் 01, 2024 09:34 AM

சாலையின் இருபக்கமும் பசுந்தோரணமாய் மரங்கள்; சுற்றிலும் மலை; இயற்கை எழில் கொஞ்சும் கோவை, ஆனைக்கட்டி ரோடு, மழைத்துாறலில் மேலும் சிலிர்த்தது. அங்கிருந்த 'எக்ஸ்செல்சா' கென்னலில் நுழைந்தோம். பிளே ஏரியாவில், உரிமையாளர் தனுராய் உடன் விளையாடிக் கொண்டிருந்தது ராட்வீலர்.
நம்மை முகமலர்ச்சியுடன் வரவேற்ற அவர், மினி 'கென்னல் டூர்' சுற்றி முடித்ததும் பேசத்துவங்கினார். ''இங்க 20 டாக்ஸ் இருக்கு. எல்லாருக்குமே தனித்தனி அறை. குட்டி பிளே ஏரியா. சோசியலா விளையாட தனியா ஒரு ஏக்கர்ல பிளே கிரவுண்ட். கென்னலுக்குள்ளே 'லேபர் வார்டு' இருக்குது. டாக் கரு உருவாகும் பீரியட்ல இருந்து டெலிவரி முடிஞ்சி, பேசிக் வாக்சினேஷன் போடுற வரைக்கும், ஸ்பெஷல் கேர் கொடுப்பேன். என்னோட கலெக்ஷன்ஸ் தவிர, மற்ற பப்பிஸ் அக்ரிமென்ட் போட்டு வித்துடுவேன்,'' என்றார்.
'என்னது டாக் விக்கிறதுக்கும், அக்ரிமென்ட்டா?'
ஆமாங்க. என்கிட்ட பப்பி வாங்குறவங்க, அதை நல்லா கவனிச்சிக்கணும். என்ன நோக்கத்துக்காக டாக் வாங்குறாங்கன்னு தெரிஞ்சிக்குவேன். என்கிட்ட இருக்கறது ஒர்க்கிங் டாக். ரொம்ப எனர்ஜிட்டிக்கா இருக்கும். இதோட, டெய்லி ஒரு மணி நேரமாவது விளையாடணும். ஒரிஜினல் ப்ரீட்ங்கறதால, அதை எப்படி பாத்துக்கணும்னு, ஓனருக்கு கவுன்சிலிங் கொடுப்பேன்.
'ஒரிஜினல் ப்ரீட்னு' எப்படி தெரிஞ்சிக்கறது?
டாக்ஸ் பொறுத்தவரைக்கும் 'பீமேல்' தான் லீடிங் ரோல் இருக்கும். அதோட, எந்த 'மேல்' டாக் 'மேட்' பண்ணணும்கிற கால்குலேஷனை, ப்ரீடிங் சயின்ஸ்னு சொல்வோம். இதுல, குவாலிட்டியான ஜெனிட்டிக்கோட பிளட் லைன் தேடணும். அப்போ தான், மரபு ரீதியான நோய்கள் இல்லாத ஹெல்தியான பப்பி உருவாக்க முடியும்.
என்னால ஒரு தாய் நாயோட ஐஸ், நோஸ், இயர்ஸ் ஷேப்பும், தந்தையோட ஸ்மைல் லுக் மட்டும் இருக்கற மாதிரியான, பப்பி உருவாக்க முடியும். இந்த அல்காரிதம் தெரிஞ்சவங்க கிட்ட, பப்பி வாங்குனா தான், அதோட ஒரிஜினல் ஜெனிட்டிக் குவாலிட்டி மெயின்டெய்ன் ஆகும்.கிட்டத்தட்ட 20 வருஷமா ராட்வீலர் ப்ரீட் பண்றேன். என்னோட ராட்வீலர்ஸ், ஒரிஜினல் குவாலிட்டில இருக்குன்னு, ஜெர்மன்ல இருக்கற, ராட்வீலர் கிளப் சர்டிபிகேட் குடுத்துருக்கு. இப்போ டாஸ்ஹன்ட், லேப்ரடார், பஸ்மின்-னு சில டாக்ஸ ப்ரீட் பண்றேன். கென்னல் கிளப் சர்டிபிகேட் இருந்தாவே, ஒரிஜினல் ப்ரீட் தான்.
நான் ஒரு டாக்கோட பிளட் லைன்னுக்காக, கடல் கடந்தும் போவேன். இது, பிசினஸ் தாண்டி, ஒரு கலை. நல்ல ப்ரீடர்ங்கற பேருக்காக, எவ்ளோ மெனக்கெட்டாலும் அது வொர்த் தான்.