Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/செல்லமே/ அன்பின் கதை பேசும் அலங்கார ஆடைகள்

அன்பின் கதை பேசும் அலங்கார ஆடைகள்

அன்பின் கதை பேசும் அலங்கார ஆடைகள்

அன்பின் கதை பேசும் அலங்கார ஆடைகள்

ADDED : செப் 12, 2025 11:24 PM


Google News
Latest Tamil News
உ த்திரபிரதேச மாநிலம், நொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும், 'ராப் இன் பர்' (Wrap In Fur) செல்லப்பிராணிகளுக்கான ஆடை வடிவமைப்பு நிறுவன தலைவர் சின்மைய்; பி.டெக்., பட்டதாரியான இவர், பப்பி, மியாவ்களுக்கான ஆடைகளில், பல்வேறு பிரத்யேக டிசைன்களை, சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இவர் நம்மிடம் பகிர்ந்தவை:

என்னுடைய பப்பி 'டுக் டுக்'(பீகில்)-ஐ, எங்கே சென்றாலும் உடன் கொண்டு செல்வதால், அடிக்கடி ஆடை அணிவிப்பது வழக்கம். இதற்கான ஆடைகளை தேடிய போது, ஒரு சில நிறுவனங்களே சந்தையில் இருந்தன. அவையும், உரிய அளவில் வடிவமைத்து தருவதில்லை. அளவு மாறியிருந்தால், திருப்பி அளிக்கும் வசதி இருக்காது. எனக்கு டிசைனிங் துறையில் ஆர்வம் இருந்ததால், என் பப்பிக்கு நானே ஆடையை உருவாக்க களமிறங்கினேன். இதையே பிசினஸாகவும் மாற்றி விட்டேன். சந்தையில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் புதுமையாக சிந்தித்தால் எந்த துறையிலும் வெற்றி பெறலாம். 2020 ல் ஆரம்பித்த இந்த பிசினஸில் தற்போது வரை, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்லப்பிராணிகளுக்கு ஆடைகளை வடிவமைத்துள்ளோம்.

சிட்ஜூ, பீகில் முதல் பெரிய இன பப்பி வரை, அனைத்து அளவுகளுக்கும், ஆடை வடிவமைத்து தருகிறோம். எப்படி அளவு எடுப்பது என, உரிமையாளர்களுக்கு விளக்குகிறோம். அவர்கள் தரும் அளவுகளுக்கு ஏற்ப, விரும்பும் டிசைனில், ஆடைகளை உருவாக்கி தருகிறோம்.

எங்களின் ஆடைகளில், எம்பிராய்டரி ஒர்க் செய்து, பப்பியின் பெயர் பொறிப்பது, பப்பிக்கும் உரிமையாளருக்குமான மறக்க முடியாத விஷயங்களை, ஆடைகளில் டிசைனாக உருவாக்கி தருவது என, சில புதுமைகளை புகுத்தி வருகிறோம். அன்றாட பயன்பாட்டுக்கான கவுன் முதல், விசேஷங்களுக்கு அணிவிக்க பந்தனா, லெஹங்கா, கழுத்தில் அணிவிக்கும் 'டை' தயாரிக்கிறோம்.

இத்துடன், தீபாவளி, பொங்கல், ஓணம், ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளுக்கு, நவராத்திரி, ஹோலி போன்ற கலாசார விழாக்களுக்கும், செல்லப்பிராணிகளுக்கு பிரத்யேக ஆடைகளை வடிவமைக்கிறோம். திருமணத்தில், ஹல்தி, மெஹந்தி, சங்கீத் வைபவங்களுக்கு, மணமக்களின் ஆடைக்கேற்ற நிறத்திலே, செல்லப்பிராணிகளுக்கும் ஆடை வடிவமைக்கிறோம். இதை அணிந்து அவை உங்களுடன் வலம்வரும் போது, தனித்துவமாக காட்சியளிக்கும், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us