Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/செல்லமே/இதெல்லாம் தான் இப்போ டிரெண்டாம்!: புதுசு புதுசா யோசிக்கிறாங்கப்பா

இதெல்லாம் தான் இப்போ டிரெண்டாம்!: புதுசு புதுசா யோசிக்கிறாங்கப்பா

இதெல்லாம் தான் இப்போ டிரெண்டாம்!: புதுசு புதுசா யோசிக்கிறாங்கப்பா

இதெல்லாம் தான் இப்போ டிரெண்டாம்!: புதுசு புதுசா யோசிக்கிறாங்கப்பா

ADDED : ஜூலை 20, 2024 10:35 AM


Google News
Latest Tamil News
இக்வானா, கார்ன் ஸ்னேக், சுகர்கிளேடர்-னு, வீடு முழுக்க, வித்தியாசமான பெட்ஸ் வளர்க்கிறார், கோவை, காந்திபார்க்கை சேர்ந்த லோகேஷ். இந்த மாதிரி பெட்ஸோட எப்படி அட்டாச் ஆக முடியுதுன்னு கேட்டதும், பகிர தொடங்கினார்.

''டிரெண்டுக்கு ஏத்தமாதிரி, வித்தியாசமான பெட்ஸ் வளர்க்கணும்னு ஆசைப்பட்டு தான், இக்வானா (ரெப்டர்) வாங்குனேன். இதுக்கு, என்ன சாப்பாடு கொடுக்கறது, எப்படி பராமரிக்கறதுன்னு எதுவும் தெரியாது. கூகுள், யூ-டியூப் வீடியோ பார்த்து தான், ரெப்டருக்கு நகம் வெட்டவே கத்துக்கிட்டேன்.

ஆரம்பத்துல பெருசா என்கூட 'கனெக்ட்' ஆகலை. ஆனா, தினமும் சாப்பாடு கொடுக்கறது, குளிப்பாட்டுறது, நகம் வெட்டி விடுறதுன்னு, அதோடநேரம் செலவிட ஆரம்பிச்சேன். இப்போ, என் குரல் கேட்டாவே, தலையை எட்டிட்டு பார்க்கும். இதோட செல்பி எடுத்து போட்டா, சோசியல் மீடியால லைக் அள்ளும். பிரெண்ட்ஸ் கேங்குல, இக்வானா வந்த பிறகு, எனக்குன்னு தனி மவுசு இருக்குறதா 'பீல்' பண்றேன்,'' என்றார்.

மத்த பெட்ஸ் பற்றி...

சின்ன வயசுல இருந்தே பேர்ட்ஸ் வளர்க்குறேன். கல்ச்சர் பொமரேனியன், ராட்வீலர், நாட்டு பூனை இருக்கு. கார்ன் ஸ்னேக் (ருத்ரா) வச்சிருக்கேன். இதுக்கு இப்போ தான் ஆறு மாசம் ஆகுது. நல்லா வளர்ந்த பிறகு தான், ருத்ராவுக்குன்னு தனியா, கண்ணாடில ரூம் செட் பண்ணணும். சுகர் கிளேடரும் இருக்கு. இவங்களுக்காகவே ரெண்டு ரூம் ஒதுக்கியிருக்கோம்.

புது புது ப்ரீட் வாங்கும் போதெல்லாம், அதை பத்தி நிறைய தெரிஞ்சிக்குறேன். புதுஅனுபவம் கிடைக்குது. இப்போ வரைக்கும்'ப்ரீடிங்'பண்ற ஐடியா இல்ல. நிறைய விஷயங்களை கத்துக்கிட்டு, வித்தியாசமான எக்ஸாடிக் வெரைட்டிய மட்டும், ப்ரீட் பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.

புதுசு புதுசா யோசிக்கிறாங்களே!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us