Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/செல்லமே/ பப்பிகளின் ஜாலிக்காக ஓரிடம்

பப்பிகளின் ஜாலிக்காக ஓரிடம்

பப்பிகளின் ஜாலிக்காக ஓரிடம்


ADDED : ஜன 04, 2025 12:49 AM

Follow on Google

ADDED : ஜன 04, 2025 12:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''அபார்ட்மென்ட்டிற்குள் அடைபட்டு காலை, மாலையில் உரிமையாளருடன் வாக்கிங் சென்று, சிறிது நேரம் மட்டுமே வெளியுலகை எட்டிப்பார்க்கும் பப்பிகள், இயற்கையில் இளைப்பாறி, உருண்டு, புரண்டு, ஓடி, தாவி, குதித்து, குதுாகலிக்க ஓரிடம் வேண்டுமென நினைத்து தான், பப்பிகளுக்கான பார்க் உருவாக்கினோம்,'' என்கின்றனர், இதன் நிறுவனர்கள் தேவிஸ்ரீ மற்றும் வித்யா.

இவர்கள், செல்லமே பக்கத்திற்காக, நம்மிடம் பகிர்ந்தவை:

கர்நாடக மாநிலம், பெங்களூரு, தேவனஹள்ளியில், 32,000 சதுர அடியில் , 'தி சென்ட்ரல் பார்க்' (The Scentral Park) அமைத்துள்ளோம். பிரத்யேகமாக பப்பிகளுக்காகவே உருவாக்கப்பட்ட இப்பார்க்கில் நிறைய மரங்களுடன், வாக்கிங் ஏரியா, நீச்சல் குளம் உள்ளது. ஆர்கானிக் முறையில், தோட்டப் பராமரிப்பு செய்வதால், மூலிகை செடிகளின் வாசத்தில், இயற்கை சூழலில் பப்பிகள் விளையாடலாம்.

பொதுவாக, பெங்களூருவில் அப்பார்ட்மென்ட் வீடுகள், நெரிசல் மிகுந்த சாலைகளால், செல்லப்பிராணிகளை வெளியிடங்களுக்கு அழைத்து செல்வதில் எக்கச்சக்க சிரமங்கள் இருக்கின்றன. இதனால், பப்பிகள் ரிலாக்ஸாக விளையாடும் வகையில், பார்க் வடிவமைத்தோம். குறிப்பிட்ட நேரத்தில், 5 பப்பிகள், 10 நபர்களை மட்டுமே அனுமதிக்கிறோம். அப்போது தான், அவை சுதந்திரமாக சுற்றி விளையாடும்.

பப்பி ஏறி குதித்து விளையாட, சில அமைப்புகளை உருவாக்கி இருக்கிறோம். மணலில் உருண்டு விளையாடி, களைத்து போகும் நேரத்தில், குளத்தில் குதித்து ரிலாக்ஸாக அவை நீந்தும். இங்கு கொண்டுவரும் பப்பிகள் முறையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என்பதை பரிசோதித்த பிறகே அனுமதிப்பதால், மற்ற பப்பிகளுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாது. பப்பிகளுக்கு பிரத்யேக உணவகம், உரிமையாளர்களுக்கு தனி கேண்டீன் வசதி இருப்பதால், ஓய்வு நாளில் இங்கு வந்து, உங்கள் பப்பியுடன் நேரம் செலவிடலாம்.

தொடர்புக்கு:scentralpark.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap