Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/செல்லமே/ ஆனந்த கூத்தாடும் மனம்; ஆடு, மாடுகளுடன் தினம்

ஆனந்த கூத்தாடும் மனம்; ஆடு, மாடுகளுடன் தினம்

ஆனந்த கூத்தாடும் மனம்; ஆடு, மாடுகளுடன் தினம்

ஆனந்த கூத்தாடும் மனம்; ஆடு, மாடுகளுடன் தினம்

ADDED : மார் 21, 2025 11:18 PM


Google News
Latest Tamil News
''வால் பிடித்து, திமில் மீது ஏறி, குழந்தைகள் ஆட்டம் போடும் போதெல்லாம், அப்பாவியாக முகத்தை வைத்து கொள்ளும், இந்த காரியும், கோவை கைதியும், ஜல்லிக்கட்டு களத்தில் சீறிப்பாய்ந்து கிளர்தெழும்,'' என்கிறார், கோவையை சேர்ந்த ஜாபர் சாதிக்.

நாட்டு மாடு, தேனி மலை மாடு, நாட்டு ஆடு, சேவல், கோழி, புறா, பறவை, வான்கோழி என, வீடு முழுக்க, வித்தியாசமான செல்லப்பிராணி வளர்க்கும் இவர், செல்லமே பக்கத்திற்காக நம்மிடம் பகிர்ந்தவை:

மாடுகளுக்கும், மனிதர்களுக்குமான உறவு உணர்வு ரீதியாக பிணைக்கப்பட்டது. விவசாய நிலங்கள் குறைய தொடங்கிய போது, நம் நாட்டு இன மாடுகளும், அதை வாங்கி வளர்ப்பவர்களும் குறைந்துவிட்டனர். ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த சமயத்தில் தான் அந்த உணர்வு மீண்டும் கிளர்ந்தெழுந்தது.

பல கட்ட தேடலுக்கு பின், ஒரு ஜோடி தேனி மலைமாடு, நாட்டு மாடு, ஒரு நாட்டு ஆடு வாங்கினேன். இவை வீட்டிற்கு வந்த பிறகு, நிறைய விஷயங்களை கற்று கொண்டேன். என்னதான் ஜல்லிக்கட்டு காளையாக இருந்தாலும், வீட்டிலுள்ளோரிடம் குழந்தை மாதிரி தான் நடந்து கொள்ளும். என் குழந்தைகள், இம்மாட்டின் வால் பிடித்து, திமில் மீது ஏறி விளையாடினால் கூட, எந்த அசைவும் இல்லாமல், அப்பாவி போல முகத்தை வைத்திருக்கும். இதே காளையை, ஜல்லிக்கட்டு நடக்குமிடத்தில் பார்த்தால், யாரையும் நெருங்க கூட விடாமல் சீறிப்பாயும்.

மாடு தவிர, நாட்டு ஆடு, வான்கோழி, சேவல், கோழி, புறா, பறவைகள் இருக்கின்றன. செல்லப்பிராணிகளுடன் நேரம் செலவிடும் போது, எவ்வளவு பணிச்சுமை, மன அழுத்தம் இருந்தாலும் நொடியில் மறைந்து விடுகிறது. ஒருநாள் என்னை காணாவிட்டாலும், வாகனத்தின் சத்தத்தை கேட்டதும், குரல் கொடுத்து அழைப்பது, சாப்பிடாமல் காத்திருப்பது போன்ற, உணர்வு ரீதியான பிணைப்பை, ஒவ்வொரு நாளும்உணர்கிறேன். இதை அடுத்த தலைமுறைக்கும் கடத்த வேண்டுமென்பதே ஆசை. விலங்குகளுடன் வாழ்ந்தால் தான், மனிதர்களை போலவே, அவைகளுக்கும் உணர்வு இருக்கிறது, அவற்றை பராமரிக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது என்பதை, குழந்தைகள் உணருவர், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us