ADDED : ஜன 01, 2024 03:57 PM

வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரும் பறவைகளை விற்பனை செய்வது வளர்ப்பது குற்றமாகும். இச்சட்டத்தின் கீழ் வராத வளர்ப்பு பறவைகள், வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரும் பறவைகளை சிலர் வாங்கி விற்பனை செய்கின்றனர்.
பறவைகளை 'லைசன்ஸ்' உடன் வாங்கி விற்பனை செய்பவர்கள், அப்பகுதியில் உள்ள மாவட்ட வன அலுவலரிடம் முறையாக விண்ணப்பித்து உரிமம் பெற வேண்டும். அந்த பறவைகளை வாங்கி வளர்ப்பவர், அவை குறித்த அனைத்து விபரங்கள் அடங்கிய ஆவணம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இதற்கான வழிமுறைகள், மாவட்ட வன அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நம் நாட்டில், பிங்கஸ், ஆப்ரிக்கா லவ் பேட்ஸ், கோக்டெல் உட்பட இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ள லவ் பேட்ஸ்களை அதன் ஆவணங்களை, விற்பனையாளரிடம் பெற்ற பின் வளர்க்கலாம்.