Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/செல்லமே/டாக்டர்'ஸ் கார்னர்: மக்காவ் வளர்ச்சிக்கு மல்டிவிட்டமின் டிராப்ஸ்!

டாக்டர்'ஸ் கார்னர்: மக்காவ் வளர்ச்சிக்கு மல்டிவிட்டமின் டிராப்ஸ்!

டாக்டர்'ஸ் கார்னர்: மக்காவ் வளர்ச்சிக்கு மல்டிவிட்டமின் டிராப்ஸ்!

டாக்டர்'ஸ் கார்னர்: மக்காவ் வளர்ச்சிக்கு மல்டிவிட்டமின் டிராப்ஸ்!

ADDED : ஜூலை 27, 2024 11:54 AM


Google News
Latest Tamil News
புதிதாக 'மக்காவ்' பறவை வளர்ப்பதால், அதை எப்படி பராமரிப்பது என்ற வழிகாட்டுதல் தேவைப்படுகிறது.- எம். லட்சுமி, கோவை.

மக்காவ் போன்ற எக்ஸாடிக் பறவைகளை வளர்க்க நினைப்போர், அதன் வளர்ச்சியை பொறுத்து, போதிய இடம் ஒதுக்க வேண்டும். மக்காவ் பொறுத்தவரை, மூன்று அடி வரை வளரும் என்பதால், 10x10 அளவுள்ள இடம் ஒதுக்கினால் தான், அவை பறந்து விளையாட வசதியாக இருக்கும்.

கிட்டத்தட்ட 20-50 ஆண்டுகள் வரை வாழும் இப்பறவைக்கு, ஊட்டச்சத்துள்ள உணவு வழங்குவது அவசியம். நட்ஸ், காய்கறிகள், கீரைகள் விரும்பி சாப்பிடும். அவகேடோ தவிர மற்ற பழங்கள், மக்காவுக்கு சாப்பிட கொடுக்கலாம். இதற்கு நீளமான அடர்த்தியான இறக்கைகள் இருப்பதால், எல்லா தட்பவெப்ப சூழலையும் தாங்கிக்கொள்ளும்.

பொதுவாக பறவை வளர்ப்பவர்கள், அதன் இடத்தை தினசரி சுத்தப்படுத்துவது அவசியம். காலை, மாலையில் சுத்தமான தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும். மக்காவ் பறவைக்கான கமர்ஷியல் உணவுகள் கடைகளில் கிடைக்கின்றன. இதன் வளர்ச்சிக்கு ஏற்ப மல்டிவிட்டமின் டிராப்ஸ், தண்ணீரில் கலந்து கொடுப்பது அவசியம். மற்றபடி, எந்த தடுப்பூசியும் போட வேண்டியதில்லை.

- டாக்டர் கே.கே. கீதா,உதவி இயக்குனர், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு, கோவை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us