Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/அவியல்/நாங்க என்ன சொல்றோம்னா...: தாய் கிழவி

நாங்க என்ன சொல்றோம்னா...: தாய் கிழவி

நாங்க என்ன சொல்றோம்னா...: தாய் கிழவி


PUBLISHED ON : மார் 08, 2026

Follow on Google

PUBLISHED ON : மார் 08, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'கவுரவ தோற்றம்' அடையாளம் 'கதாநாயகி' அந்தஸ்து பெற்றிருக்கிறது

பவுனுத்தாயி... உங்கிட்டே கடைசியா பேசுறேன்த்தா. டைரக்டர் சிவக்குமார் முருகேசா... உன் ஆத்தாகிட்டே சொல்லி உனக்கு திருஷ்டி சுத்திப் போடச் சொல்லுய்யா; போட்டிருக்கும்... பெத்த ஆத்தாளுக்குத் தெரியாதா... மகன் எம்புட்டு உசரத்துல இப்போ நிற்கிறான்னு!

யய்யா... பவுனுத்தாயி தன் மகளுக்கு இரண்டாம் கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்கு முன்னாடி, அவ பேரன் கையில பெயின்டையும், பிரஷ்ைஷயும் கொடுத்து ஒரு காரியம் பண்ண வைச்சே பாரு... ஆத்தி... உள்ளுக் குள்ளே என் உசுரு விசும்புற சத்தத்தை ரொம்பநாள் கழிச்சு கேட்டேன்யா; நிறைஞ்சிட்டேன் போ!

பவுனுத்தாயி மக தன் அண்ணிககிட்டே தான் வாழ்ற வாழ்க்கையைப் பத்தி சொல்றப்போ, 'கூட ரெண்டு வார்த்தை இந்த புள்ள பேசாதா'ன்னு ஏங்கிப் போனேன்யா; இப்போ உனக்கு ஒரு டவுட்டு வரும்... உன்கூட இப்போ பேசிக்கிட்டு இருக்கு றது ஆ ம்பளையா... பொம்பளையான்னு; ' ஆம்பளை மனசிருக்கிற பொம்பளை'ன்னோ, 'பொம்பளை மனசிருக்கிற ஆம்பளை'ன்னோ வைச்சுக்கோயன்; ரெண்டு பேருக்கும் தானய்யா அந்த சீன்ல நீ பாடம் நடத்துனே!

யய்யா... வாழ் க்கையை ஒரு பொம்பளை எப்படி வளைக்கலாம்னு நீ பார்த்ததை, கேட்டதை வைச்சு சொல்லிட்டே; ஆனாய்யா... நீ சொன்னமாதிரி எ ல்லாம் ஒருத்தியால சுலபமா ஜெயிச்சுட முடியாது. மகளுக்கு இரண்டாம் கல்யாணம் பண்ணி வைச்சதை தவிர, பவுனுத்தாயி செஞ்ச நல்ல காரியம்னு நீ எதை சொன்னே; வட்டிக்காசுல வளர்த்த வயிறு பவுனுத்தாயி நடக்குறப்போ அவளுக்கே பாரமா தொங்குதேய்யா! இன்னும் கொஞ்சம் விவரமா யோசி என்ன!

அப்புறம்... மதுரைக்காரனோட வெள்ளந்தி பேச்சை பட்டிமன்றத்துல கேட்டாலும், படத்துல கேட்டாலும் ஜனங்க சிரிச்சுக்கிட்டுதான் இருக்கும்; அடுத்த படத்துக்கும் இதையே நம்பிட்டு இருந்திராதப்பு!

ஆத்தா பவுனுத்தாயி... என்ன கன்றாவி மேக்கப்பு ஆத்தா இது; அழகி நீ இதுக்கு எப்படி ஒத்துக் கிட்டே; என்ன வோ போ ஆத்தா.

ஆக...

முன் நிற்க வேண்டிய சிங்கம்புலி, அருள்தாஸ், பாலசரவணன், 'ஆத்தா' விளம்பரத்தால் பின் நிற்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap