நாங்க என்ன சொல்றோம்னா...: டிடெக்டிவ் உஜ்வாலன் (மலையாளம்)

PUBLISHED ON : ஜூன் 01, 2025

எங்கிருந்தாலும் கொலையாளி இங்கு வரவும்!
எப்.ஐ.ஆர்., பதிய வேண்டிய அவசியமே இல்லாத பிலாச்சிக்காவு கிராம சூழல்; பணி மறந்துபோய் காவலர்கள் இருக்கும் சூழலில் தொடர் கொலைகள்; துப்பறிவாளன் உஜ்வாலனின் திறனும் கொலையாளியை நெருங்க முடியாத நிலை; அடுத்தது என்ன?
மின்னல் முரளி கதையினது காலகட்டத்தில் நிகழ்வதாக இதன் திரைக்கதை. 228 பேர் வாழும் கிராமத்தில் அங்கு நிகழும் விஷயங்களை சொல்வதற்கு என்றே ஒரு 'டிவி' சேனல்; 'வெட்டி ஆபீசர்கள் நிறைந்துள்ள ஊர்' என்று எள்ளி நகையாடுவதற்காக நிறைய சித்தரிப்புகள்!
உஜ்வாலனின் துப்பறியும் திறமை பெரிதாக ஈர்க்கவில்லை; ஆனால், 'நம்ம ஊருக்கு நாமதான் காவல்காரனா இருக்கணும்' என்கிற அவனது வேட்கை உணர்வு ஈர்க்கிறது! இருள் மீதான அவனது அச்சத்திற்கான பின்னணி கதை ஏற்கும்படி இருக்கிறது!
அழுத்தமான வில்லன் கதாபாத்திரம் இல்லாததும், பரபரப்பான விசாரணை காட்சிகள் இல்லாததும் ஆங்காங்கே வெறுமையை உணர்த்துகிறது. தன்னால் கொலையாளியை தேடிப்பிடிக்க முடியாதபோது, தன்னைத் தேடி அவனை வரவழைக்கும் உஜ்வாலனின் இறுதிகட்ட யுக்தி மட்டுமே, கிட்டத்தட்ட அணைந்துவிட்ட திரைக் கதைக்கான எண்ணெய்!
ஷெர்லாக் ஹோம்ஸ், பேட்மேன், ஜேம்ஸ்பாண்ட் உள்ளிட்டோரை கடவுளாக வணங்கும், 'வாக்மேனில்' ஆங்கில பாப் பாடல்கள் கேட்கும், அறிவியல் புத்தகங்களைப் படிக்கும் உஜ்வாலனிடம், இயக்குனர்கள் இந்திரநீல் கோபாலகிருஷ்ணனும், ராகுலும் இன்னும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கலாம்.
ஆக...
'நடிகர் கமல் எதற்காக அரசியலுக்கு வந்தார்' என்று தற்போதும் பதில் தேடுவோருக்கான படம்!