Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/அவியல்/த்ரிடம் (மலையாளம்)

த்ரிடம் (மலையாளம்)

த்ரிடம் (மலையாளம்)


PUBLISHED ON : மே 17, 2026

Follow on Google

PUBLISHED ON : மே 17, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விஜய் பதவியேற்பும் ஒரு துரோகமும்

பெரும் வழக்குகள் ஏதும் பதிவாகாத காவல் நிலையத்தில், உதவி ஆய்வாளராக விஜய் ராதா கிருஷ்ணன் பதவியேற்கச் செல்லும் மலைப் பாதையில் இருந்து துவங்குகிறது கதை. 'மலை இருந்தால் மழை உண்டு; மழை பெய்தால் கொலை உண்டு' என நம்மை பழக்கப்படுத்தி இருக்கும் மலையாள திரைக்கதை, இதில் அடுத்தடுத்து மூன்று கொலை, இடையில் ஒரு வங்கி கொள்ளை என நிகழ்த்த துப்பறியத் துவங்குகிறார் விஜய்!

எந்த கொலையும் நிகழ்வதற்கு முன்பான 'திடுக்' காட்சிகள் இல்லை; மூன்றாவது சடலம் கிடைக்கும் தருணம் இரவு என்பதால், கம்பளி பூச்சி கால்மூட்டு வரை ஏறி இறங்குவது போல் லேசாய் 'திகில்' உணர்வு; மற்றபடி, அந்த ஆறடி வெண் ணெய் சிற்பமான பெண் காவலர் துணையுடன் புலன் விசாரணை செய்து கொண்டே இருக்கிறார் அழகு விஜய்; அழகும், அறிவும் ததும்பும் படியான இக்காட்சி களில் எந்த ஒன்றும் திகட்டவில்லை.

'கொலையாளி யார்' என்பது கிடக்கட்டும்; 'கொலையானவர்கள் யார்' என்றே கண்டுபிடிக்க இயலாது சுற்றினாலும், ஒவ்வொரு விசாரணையின் முடிவிலும் ஒரு கதவு திறக்கப்பட்டுக் கொண்டே இருப்பதால், விஜய் தோளில் கைபோட்டபடி உடன் சுற்றுகிறது நம் ரசனை.

தமிழக முதல்வரின் உடை போல் இப்படைப்பிற்கான ஒளிப்பதிவு செம கச்சிதம்! 'கண்ணாமூச்சி விளையாட்டு போலத்தான் காதலும்' என்பார்களே... அது உண்மை; கண்ணாமூச்சியில் கண்டுபிடிக்கும் வரை போதை; காதலில் காதலை வெளிப் படுத்தும் வரை போதை; விஜயின் தாயை திடீரெனப் பார்த்ததும், விஜய் மீதான காதல் பொங்கி பிரவாகம் எடுப்பதை வெண்ணெய் சிற்பத்தின் கண்கள் வழி சொன்னவிதம்... 100 சதவீதம் கிளர்ச்சியூட்டும் கள்!

'குற்றவாளி யார்' என தன் குழுவினர் உதவியோடு விஜய் கண்டறியும் விதமும், துளியும் நம்மால் கணிக்க இயலாத 'க்ளைமாக்ஸ்' காட்சியும், 'தீயசக்தி'களை தகர்த்து 'துாயசக்தி' பெற்ற வெற்றி போல் மி ன்னுகிறது.

ஆக...

மே 4ல் இருந்து 'பிரேக்கிங் நியூஸ்' பார்ப்பவர்களுக்கு இது சுமாரான படம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap