Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/அவியல்/நில் கவனி யோசி...

நில் கவனி யோசி...

நில் கவனி யோசி...

நில் கவனி யோசி...

PUBLISHED ON : ஜூன் 15, 2025


Google News
Latest Tamil News
'பேரன்பு, துணிச்சல் மற்றும் படைப்பாற்றலை மேடையிலும் திரையிலும் மட்டுமல்லாது களத்திலும் வாழ்விலும் நடைமுறைப்படுத்தி காட்டியவர்களே எங்கள் வழிகாட்டிகள்' என்கின்றனர் கன்னியாகுமரி,

விவேகானந்தா கல்லுாரி மாணவ, மாணவியரான இவர்கள்! 'உணவு சங்கிலியைப் போல் அன்பு சங்கிலியாலும் பூமியில் உயிர்கள் தழைத்தோங்கும்' என்று நான் உணர்ந்த இடம்... அஞ்சுகிராமம் பேருந்து நிறுத்தம், உணர்த்தியவர்கள்... ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்கும் இளைஞரும், அந்த உணவை தெருநாயுடன் பங்கிடும் தாத்தாவும்!'

- ரா.பெனிஷா, முதுநிலை கணிதவியல்.

'வெளிநாட்டு மண்ணில் முதன்முதலில் இந்திய தேசியக் கொடி பறக்க காரணமான இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை பிகாஜிருஸ்தம் காமாவை நான் வியக்கிறேன். கணவரது பிரிட்டிஷ் ஆதரவால் மண வாழ்க்கை கசந்தாலும் கொள்கையில் வாழ்வை ரசித்த பிகாஜி காமா என் ஆதர்ச பெண்!'

- கி.தர்ஷா, இளநிலை கணிதவியல்.

'நிலையான நகர்வு முறைகளை கொண்டது கிளாசிக்கல் செஸ். நிலையில்லா 'செஸ் 960' நகர்வு முறை மூலம் சதுரங்க களத்தில் சாதனை படைத்தவர் பாபி பிஷ்ஷர். முன்னவர்கள் அடியொற்றி பயணிக்க விரும்பாத பாபியின் நம்பிக்கையை எனக்குள் வளர்க்க தீவிர முயற்சியில் இயங்குகிறேன்!'

- சு.சஞ்சய், இளநிலை கணிதவியல்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us