sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/அவியல்/சில நேரங்களில் சில(ர்) ஞாபகங்கள்!

சில நேரங்களில் சில(ர்) ஞாபகங்கள்!

சில நேரங்களில் சில(ர்) ஞாபகங்கள்!


PUBLISHED ON : மார் 22, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 22, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஹரஹர மஹாதேவ்.. . ஹரஹர மஹாதேவ்... - பீஹார், கிழக்கு சாம்பரான் மாவட்ட விராட் ராமாயண் கோவில்ல வானம் அதிர்ற அளவுக்கு இந்த கோஷம்; இந்த பக்தி வெள்ளத்துக்கு மத்தியில நான் வடிச்ச 'சகஸ்ரலிங்கம்' பிரதிஷ்டை ஆகுது; எப்படி இருக்கும்னு யோசிச்சு பாருங்க... உடம்பு சிலிர்த்துப் போச்சு!'

மாமல்லபுரம் பட்டிகாடு கிராமத்தைச் சேர்ந்த 71 வயது சிற்பி லோகநாதனுக்கு, ஜனவரி 17, 2026ல் கிடைத்திருக்கிறது இந்த பரவசம். இவரது நினைவில், இதற்கு மிஞ்சிய இன்னும் இரு பரவசங்கள் உண்டு; அ வை...


நான் கண்ட காட்சி

பீஹார்ல, அந்த கோவில் க ட்டுற இடத்தைச் சுற்றி பல மைல் தொலைவுக்கு வீடுகளே இல்லை. ஆனா, சிலையை கொண்டு போனதும், எங்கே இருந்துதான் அவ்வளவு ஜனங்க வந்தாங்கன்னு தெரியலை; பிரதிஷ்டைக்கு முன்னாடியே சிலைக்கு பால் அபிஷேகமெல்லாம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அவங்க சிவன் மேல காட்டின அந்த அன்புக்கு முன்னால நான் பட்ட கஷ்டமெல்லாம் ஒண்ணுமே இல் லை!



அற்புதம் உணர்ந்த தருணம்


என் நலவிரும்பி ஹே மலதா மூலமா எனக்கு இந்த வாய்ப்பு கிடைச்சது. 'அடிப்பகுதியான ஆவுடை இல்லாம, 33 அடி உயரத்துல ஒரே கல்லுல லிங்கம்; அதுவும், 1,008 லிங்கம் அதுல பதிஞ்சிருக்கிற மாதிரி சகஸ்ரலிங்கமா, பிரம்ம பாகம், விஷ்ணு பாகம், ருத்ர பாகத்தோட இருக்கணும்'னு கேட்டிருந்தாங்க. திருநெல்வேலி பக்கம் கல்லை கண்டுபிடிச்சு பட்டிகாடுக்கு கொண்டுவர ஏழு ஆண்டுகள்; இதுக்குள்ளே ஏகப்பட்ட சோதனைக ள்!

கல்லை கொண்டு வர அனுமதி கிடைக்கலை. ஆனா, சீக்கிரம் எடுத்துட்டுப் போகச் சொல்லி குவாரியில இருந்து நெருக்கடி. ஒருநாள், 'சீக்கிரம் கல்லை எடுத்துட்டுப் போகலேன்னா உடைச்சு வித்துருவேன்'னு குவாரிக்காரர் சொல்ல, என்ன பண்றதுன்னு தெரியாம, 'உடைச்சா உடைச்சுக் கோப்பா'ன்னு நானும் சொல்லிட்டேன்.

உடைக்க சொல்லிட்டு அவர் வீட்டுக்கு கிளம்பி இருக்கார். வழியில, அவரோட கண்கள் இருட்டி பாதை மறைஞ்சிருக்கு. மனுஷனுக்கு என்ன தோணுச்சோ... தன் ஆளுகளை கூப்பிட்டு, 'தம்பிகளா... கல்லை உடைச்சிடாதீங்க'ன்னு சொல்ல, அவர் பார்வை தெளிவாயிருக்கு.

நடந்ததை என்கிட்டே சொல்லி மன்னிப்பு கேட்டார்; 'இது என் வேலை; உன்கூட நான் இருக்கேன்' னு என் அப் பன் சிவன் என்கிட்டே சொல்ற மாதிரி இருந்தது. மூணே வருஷத்துல, 210 டன் எடையில லிங்கம் தயாராயிருச்சு.

இதேமாதிரி, இலங்கையிலேயும் 2009ம் ஆண்டு, சேஷ சயன ரங்கநாதரை செதுக்குற வாய்ப்பு கிடைச்சது; சிலையழகை பார்த்துட்டு அமைச்சர் மெர்வின் சில்வா என்னை கட்டிப் பிடிச்சு பாராட்டினார்.

இப்படி, தன்னை செதுக்குற பாக்கியத்தை சிவனும், ஹரியும் எனக்கு கொடுத்துட்டாங்க; இந்த ஜென்மத்துக்கு இதுக்கு மேல என்ன வேணும்; இந்த ஞாபகங்கள் போதும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us