Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/அவியல்/ஏழரை கேள்விகள்!

ஏழரை கேள்விகள்!

ஏழரை கேள்விகள்!

ஏழரை கேள்விகள்!

PUBLISHED ON : மே 04, 2025


Google News
Latest Tamil News
தமிழக மக்களின் மனம் வென்ற அண்ணாமலையாரே... தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் தமிழகம் கேட்கும் இக்கேள்விகளுக்கு பதில் கூறுவீரா?

1. பழனிசாமி, சீமான், ஜோசப் விஜய் மற்றும் முதல்வர் உள்ளிட்ட தலைவர்களது வீட்டுப் பிள்ளைகள் மும்மொழி படிப்பது தொடர் பாக தாங்கள் கேட்ட 'வெள்ளை அறிக்கை' பற்றி எங்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறீர்களா?

2. 'முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள் அதானியை சந்தித்ததை மறுத்தால் ஆதாரங்களை வெளியிடுவேன்' என்பது தமிழக பா.ஜ., தலைவராய் நீங்கள் சொன்னது; அந்த இமாலய சிக்ஸரை இப்போது நாங்கள் எதிர்பார்க்கலாமா?

3. சீமானால் 'அப்பா...' என்றழைக்கப்பட்ட 'அல் - உம்மா' பாஷாவின் இறுதி ஊர்வல நிகழ்வுக்குப் பின், தேசிய புலனாய்வு முகமை கிளையை கோவையில் அமைக்க முயற்சித்திருப்பதாகச் சொன்னீர்கள்; அதன் நிலை என்ன?

4. 'தரப்பரிசோதனை செய்யப்பட்ட பருத்தி நுால்களில் நெய்த 20 லட்சம் இலவச பொங்கல் வேட்டிகளில், 65 சதவீதம் பாலியஸ்டர் எப்படி வந்தது' எனும் உங்கள் கேள்விக்கு அரசு தரப்பில் இருந்து தரமான பதில் கிடைத்ததா?

5. 'புதிய மருத்துவ கல்லுாரிகள் கேட்டு நவ.,26, 2023க்கு முன் விண்ணப்பிக்கத் தவறி 900 மருத்துவ இடங்களை தமிழக அரசு இழந்துவிட்டது' எனும் உங்களது ஆதங்கத்தை நாங்கள் சரியாக உள்வாங்கி இருக்கிறோமா?

6. செப்.,27, 2024ல் பிரதமரை முதல்வர் சந்தித்த பின்பும் இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோரயில் திட்டத்திற்கு கிடைக்காத ஒப்புதல், செப்.,30ல் பிரதமருக்கு நீங்கள் கடிதம் எழுதியதும் அக்.,3ல் கிடைத்ததன் அர்த்தம் என்ன?

7. காவல் ஆய்வாளர் 2025ல் கைது என்றாலும், 'ஆகஸ்ட் 2024ல் 'போக்சோ' புகார் தர வந்த சிறுமியின் பெற்றோர் சென்னை, அண்ணாநகர் காவல் நிலையத்தில் தாக்கப்படவில்லை' என அரசு மறுத்ததை ஏன் நாங்கள் மறந்துவிடக் கூடாது?

7½ 'ஏமாற்றம்' பற்றி...?




      Our Apps Available On




      Dinamalar

      Follow us