Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/அவியல்/ஏழரை கேள்விகள்

ஏழரை கேள்விகள்

ஏழரை கேள்விகள்

ஏழரை கேள்விகள்

PUBLISHED ON : ஏப் 20, 2025


Google News
Latest Tamil News
'கனிமொழியிடம் மன்னிப்பு கேள்' என்று கர்ஜித்த ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவிடம் பதில் கேட்கிறது தமிழகம்!

1. ஈ.வெ.ரா.,வின் பாதையில்தான் ம.தி.மு.க.,வும் பயணிக்கிறது என்றால், 'எனக்கு அரசியல் வாரிசு என்று யாரும் இல்லை; என் கொள்கைகளும் கருத்தும்தான் என் வாரிசு' என்று(ம்) ஈ.வெ.ரா., சொன்னது பற்றி உங்கள் கருத்து?

2. 'நம்பி கெட்டான் சத்யா என்று வேண்டுமானால் அரசியல் உலகம் என்னைச் சொல்லலாமே தவிர...' என்பது ம.தி.மு.க., துணை பொதுச்செயலர் மல்லை சத்யாவின் குமுறல்; இதில், யாரை நம்பியதாக அவர் குறிப்பிடுகிறார்?

3. பழுத்த அரசியல்வாதியாக கூறுங்கள்; தி.மு.க., முன்னாள் அமைச்சர் மஸ்தான் திருநீறு பூசி தேர் இழுப்பது மதச்சார்பற்ற நிகழ்வெனில், மாணவர்களை 'ஜெய் ஸ்ரீராம்' என கவர்னர் சொல்லச் சொன்னது எந்த வகை யில் தவறு?

4. 'தமிழ் புத்தாண்டு' என தமிழக மக்கள் ஏற்றுக்கொண்ட சித்திரை முதல் நாளை சிலர் போல் நீங்களும் ஏற்க மறுக்குறீர்களா; உங்களது வாழ்த்து செய்தியில் 'தமிழ் புத்தாண்டு' வார்த்தைகள் இடம்பெறாதது ஏன்?

5. 'கட்சி என்பது சினிமா போல; ஒரு ஹீரோ, ஒரு வில்லன், ஒரு ஜோக்கர் வேணும்' என்று சொன்னவர் உங்கள் புதல்வர் துரை வைகோ; நீங்கள் சொல்லுங்கள்... இன்றைய சூழலில் ம.தி.மு.க.,வில் இம்மூவர் யார்?

6. 'தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக மூன்றாவது அணி' என முதலில் கேட்டது திருமாவளவன்' என்று 2016ல் கூறினீர்கள்; 2026ல் மீண்டும் திருமாவளவன் அப்படிக் கேட்டால் செய்து கொடுப்பீர்களா?

7. 'நான்தான் முதல்வர்' என்றோ, அப்படி ஒரு கனவு உண்டென்றோ சொல்லாத நீங்கள், உங்கள் தோழர்களுக்கு உங்களை முதல்வராய் பார்க்கும் ஆசை இருப்பதாய் சொன்னதுண்டு; அந்த ஆசை உயிர்ப்போடு இருக்கிறதா?

7½ 'ம.தி.மு.க., அகதியாக அலைகிறது' என்றவர் பற்றி...?




      Our Apps Available On




      Dinamalar

      Follow us