Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/அவியல்/ஏழரை கேள்விகள்

ஏழரை கேள்விகள்

ஏழரை கேள்விகள்

ஏழரை கேள்விகள்

PUBLISHED ON : பிப் 23, 2025


Google News
Latest Tamil News
'உங்களில் ஒருவன்' எனச் சொல்லி, 'எங்களில் ஒருவன்' ஆக முயலும் முதல்வரே... பதில் கூறுங்கள்!

1. புகார் அளித்த அண்ணா பல்கலை மாணவியின் தைரியத்தை பாராட்டிய உங்கள் காவல் துறை, ஐ.பி.எஸ்., அதிகாரி மீது பாலியல் புகார் அளித்த பெண் காவலரை பாராட்டியதா?

2. அரசின் கல்வி திட்டங்களில் பயனடைந்தவர்கள் தங்களுக்கு கடிதம் எழுதுவதாகச் சொல்லும் நீங்கள், இக்கல்வி தரத்தை நேரில் ஆய்வு செய்து அறிந்து கொள்ளச் சொல்லி நம் கவர்னருக்கு அழைப்பு விடுப்பீர்களா?

3. தமிழகத்தின் அறிவார்ந்த இளைய தலைமுறை 'அப்பா' என தங்களை அழைத்து ஆனந்தமூட்டுவதாக சொல்கிறீர்களே... உயிர் தந்தவருக்கு மட்டுமேயான அந்தஸ்தை கடமையைச் செய்தவருக்கு தருவது பகுத்தறிவா?

4. 'குற்றம் நிகழாமல் தடுப்பதே காவல் துறையின் பணி' எனும் உங்களது அறிவுரை, 'குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை வாங்கித் தருகிறோம்' எனும் பெருமையாய் மாறி விட்டதை நாங்கள் உணர்கிறோம்; நீங்கள்?

5. 'மக்களிடம் நேர்மை சான்றிதழ் பெறும் வரை முதல்வர் நாற்காலியில் அமர மாட்டேன்' என்ற கெஜ்ரிவால்; ஜாமினில் வந்ததுமே அமைச்சராக பதவியேற்ற செந்தில்பாலாஜி; உங்கள் மனதிற்கு நெருக்கமானவர் யார்?

6. உலகத் தலைவர்களோடும் தொழில் நிபுணர்களோடும் நம் பிரதமர் மோடி சிரித்துக் குலாவுகையில், 'இவை அவரது குடும்ப வளர்ச்சிக்காக அல்ல... நாட்டுக்காக' என்று எங்களுக்குத் தோன்றுகிறது; உங்களுக்கு?

7. '1949ல் உதித்த தி.மு.க.,வை அழிக்க முடியாது' என்று நம்பும் உங்களை, 'பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்தோன்றிய மூத்த தமிழை மூன்றாவது மொழி அழித்து விடும்' என்று நம்ப வைத்தது எது?

7½ 'சட்டம் ஒழுங்கு' என்றால்...?




      Our Apps Available On




      Dinamalar

      Follow us