PUBLISHED ON : ஏப் 06, 2025

செய்தி: 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்ட சுகாதார பெண் பணியாளர் விபத்தில் பலி!
அநீதி: சரண்யா குடும்பத்தினருக்கு இதுவரை அரசு நிவாரணமோ ஆறுதலோ இல்லை!
நான் சரண்யாவின் கணவர் சிவராஜ். 'யார் சரண்யா' என்று கேட்கிறாயா அரசே; சொல்கிறேன் கேள்...
காஞ்சிபுரம், மாம்பாக்கம் சுற்றுவட்டார கிராமங்களுக்கான 'பெண் சுகாதார தன்னார்வலர்' பணியில் 2018ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தவர் என் மனைவி சரண்யா. கர்ப்பிணியாக இருந்தும், 'கொரோனா' காலத்தில் களப்பணி ஆற்றியதற்காக மாவட்ட ஆட்சியரிடம் நற்சான்றிதழ் பெற்றவர்.
'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டம் துவக்கப்பட்ட ஆகஸ்ட் 5, 2021ல், அமைச்சர் அன்பரசன் கரங்களால் பயனாளிகளுக்கான மருத்துவ பெட்டகத்தைப் பெற்று களப்பணியை துவக்கியவர். இப்போது அவர் இல்லை; மார்ச் 19, 2024 அன்று பணிக்கு செல்கையில் நிகழ்ந்த சாலை விபத்தில் காலமாகி விட்டார்!
'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின் இரண்டு கோடியாவது பயனாளி ஈரோடு சுந்தராம்பாள்' என பெருமை பேசிய உமது நிர்வாகத்தினருக்கு, இச்சாதனைக்கு காரணமானவர்களில் ஒருத்தியாக இருந்த என் மனைவியின் இழப்புக்கு நீதி தர வேண்டும் என ஏன் தோன்றவில்லை?
எனக்கு எந்தவித ஆறுதலும் சொல்லாத அரசே... 'முதல்வரின் முகவரி'க்கு ஆகஸ்ட் 27ல் நான் அனுப்பிய மனுவுக்கு 'எண்: 9957539' கொடுத்ததோடு உன் கடமை முடிந்துவிட்டதா?