Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/அவியல்/முதல்வரே... ஒரு நிமிஷம்!

முதல்வரே... ஒரு நிமிஷம்!

முதல்வரே... ஒரு நிமிஷம்!

முதல்வரே... ஒரு நிமிஷம்!

PUBLISHED ON : மார் 23, 2025


Google News
Latest Tamil News
செய்தி: ஏப்ரல் 6, 2023 சென்னை, புளியந்தோப்பு சமுதாய நகர்ப்புற நல மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ஜனகவள்ளி உயிரிழப்பு!

அநீதி: ஜனகவள்ளியின் கணவர் கோட்டீஸ்வரனுக்கு எந்த நிவாரணமும் இதுவரை இல்லை!

மக்களின் வேதனைகளை மறைத்து சாதனைகளாக சொல்வது என்னவிதமான அரசியல் அரசே?

'தமிழகத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக மகப்பேறு மரணம், குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ளது; இவை பூஜ்ஜிய நிலை அடைய புதிய திட்டங்களை செயல்படுத்துகிறோம்' என்று உங்கள் சுகாதாரத்துறை அமைச்சர் சொல்வது எந்தவகையில் நியாயம்; இது உண்மை எனில், என் மனைவியின் இறப்பு நிகழ்ந்திருக்க கூடாதுதானே?

பிரசவ வலியில் துடித்தபடி காலை 10:15 மணிக்கு வந்த பெண்ணை, மாலை 4:30 மணி வரை மருத்துவர்கள் யாரும் வந்து பார்க்காதது முறையா; 'தாய், சேய் இருவரும் இறந்து விட்டனர்' என்று மாலை 6:00 மணிக்கு அறிவித்த அரசு நிர்வாகத்திற்கு மனசாட்சி என்பதே கிடையாதா?

ஏப்ரல் 3ம் தேதி வரை தாய், சேய் நலன் சீராக இருந்ததை சொல்லிய அரசு மருத்துவமனை ஆதாரம் என்னிடம் இருக்கிறது! நீதி கேட்டு ஏப்ரல் 17, மே 3, மே 18, ஜூன் 12, ஆகஸ்ட் 17ல் மாநகராட்சி ஆணையரிடம் கொடுத்த மனுக்களுக்கு இப்போது வரை பதில் இல்லை; ஆட்டோ ஓட்டி வாழும் எனக்கு நீதி கிடையாதா?

என் ஐந்து வயது மகனை தாயில்லா பிள்ளையாக்கி ஏங்க வைத்தவர்களுக்கு என்ன தண்டனை அரசே?




      Our Apps Available On




      Dinamalar

      Follow us