PUBLISHED ON : ஏப் 13, 2025

இவ்விடம் அரசியல் துாவப்பட்ட வெள்ளரிப்பிஞ்சுகள் கிடைக்கும்!
படிச்ச புள்ளயாட்டம் தெரியுறே... எங்கே சொல்லு... 'ராமர் பிறந்த அயோத்தி'ன்னு சொல்லாம, 'ராமர் பிறந்ததாக நம்பப்படும் அயோத்தி'ன்னு செய்தி வெளியிடுறதை நீ எப்படி புரிஞ்சுக்குறே?
அது... அது வந்து...
'என் குடும்ப நலனே பிரதானம்'னு வாழ்ந்த சில கட்சி தலைவர்களோட ஆதாரமில்லா பிறப்பிடம் பற்றி, 'இன்னார் பிறந்த இடமாக சொல்லப்படும்'னு எழுதாம 'இன்னார் பிறந்த இடம்'னு உறுதியா சொல்றப்போ, பல கோடி மக்கள் பல தலைமுறைகளா நம்பி வழிபடுற இடத்தை உறுதிபட எழுதுறதுல என்ன தயக்கம்?
அக்கா... இப்போ எதுக்காக ராமர், அயோத்தி எல்லாம்...
சொல்றேன்... ஊட்டி அரசு விழாவை காரணமா சொல்லி, பாம்பன் பால திறப்பு விழாவுக்கு வந்த பிரதமரை நம்ம முதல்வர் சந்திக்காம இருந்துட்டாரு இல்லையா...
அக்கா... மிளகாய் பொடி அதிகமா துாவுறீங்க...
இல்லப்பா... காரம் சரியா இருக்கும்; எங்கே விட்டேன்... ஆங்... ராமேஸ்வரம் வந்த பிரதமருக்கு நினைவுப் பரிசா ராமர் சிலையை என் தமிழக அரசு தரும்னு ஒரு ஹிந்துவா நான் எதிர்பார்த்தேன். வள்ளுவர் சிலை தந்ததுல சந்தோஷம்னாலும், 'ராஜராஜ சோழன் சிலை கொடுத்து கோரிக்கை வைக்கலையே'ன்னு ஒரு வருத்தம்!
என்ன கோரிக்கைக்கா?
'தஞ்சை கோவிலுக்குள்ளே ராஜராஜ சோழனுக்கு சிலை வைக்க மத்திய தொல்லியல் துறை அனுமதிக்கலை'ன்னு தானே, 1972ல் கோவிலுக்கு வெளியே சிலையை வைச்சிட்டு, 'அண்ணாதுரையின் சிலைக்கு எதிரில் இச்சிலை இருப்பதால், அண்ணன் மன்னனைப் பார்க்க மன்னன் அண்ணனைப் பார்க்க...'ன்னு கருணாநிதி வசனம் பேசினார்...
இப்போ, கோவிலுக்குள்ளே சிலை வைக்க பிரதமரோட உதவி கேட்டிருக்கலாம் இல்லையா; இந்த மார்ச் 25ம் தேதி கூட இதுசம்பந்தமா சட்டசபையில கோரிக்கை கிளம்புச்சே!
அக்கா... நல்லா அரசியல் பேசுறீங்க; ஆமா... எங்க தலைவர் ஜோசப் விஜய் பற்றி என்ன நினைக்கிறீங்க?
அம்மாடி... நீ காசை எடு... நான் கிளம்புறேன்.