Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/அவியல்/அது... நீங்களா?

அது... நீங்களா?

அது... நீங்களா?

அது... நீங்களா?

PUBLISHED ON : ஏப் 06, 2025


Google News
Latest Tamil News
சத்தியமாக பஞ்சை தொடுவது போல்தான் இருந்தது!

செக்கு நல்லெண்ணெய், சிறிய வெங்காயம், மல்லி, சீரகம், பிரத்யேக மசாலா, கொழுத்த வெள்ளாட்டுக்கறி, விறகடுப்பு... இவையே, 'மட்டன் நல்லி ரோஸ்ட்' குழம்பு ருசியின் ரகசியம்!

திருமண பத்திரிகை தர வந்திருந்த சென்னை நண்பனோடு, மதுரை சாலையிலுள்ள விருதுநகர் 'பர்மா கடை' உணவகத்தில் அமர்ந்திருந்தேன்.

இலை போட்டு கடலை எண்ணெயில் பொறித்த கமகம மொறுமொறு பரோட்டாவை அடுக்கி, 'மட்டன் நல்லி ரோஸ்ட்' குழம்பை அதன் மேல் ஊற்றியதும், வழக்கம் போல் நான் 'ஜொள்' வடிக்க... நண்பனோ...

'வயிறு முட்ட சாப்பிட்டா மூளை சிந்திக்காது நண்பா' என்றான். 'அடப்போடா...' என்றபடி, குழம்பில் ஊறிய பஞ்சு பரோட்டாவை விரல்களால் அள்ளினேன். 'எப்படிடா இருக்கு எங்க ஊரு டேஸ்டு?' என் கேள்வியை உள்வாங்காது, நல்லெண்ணெய் மிதக்கும் குழம்புக்குள் கிடந்த நல்லி எலும்பை விசில் போல் ஊதி இல்லை... இல்லை... உறிஞ்சிக் கொண்டிருந்தான். பின், கறியை லாவகமாய் கடித்து இழுத்து ருசித்தவன், 'ம்ம்ம்... வெள்ளாட்டுக்கறி கொழுப்பு நெய்யாட்டம் மணக்குதேடா' என்று கிறங்கிப் போனான்.

'நம்ம நட்புக்கு ருசியான அர்த்தம் தந்த நாள்டா இது!' - உள்ளங்கையை வாசம் பிடித்தபடி வயிறும் மனதும் நிறைந்து சொன்னவனோடு சாலைக்கு வந்தேன். அத்தருணத்தில், எங்கள் முன்னால் வரிசையாய் கடந்து போன ஆம்புலன்ஸ்களைப் பார்த்து, 'பட்டாசு ஆலை விபத்துகளுக்கு எந்த ஆட்சியில் முற்றுப்புள்ளியோ...' - தோழியிடம் ஈரமாய் வருந்தினார் ஒரு கல்லுாரி மாணவி. அந்த தங்க மனசுக்காரி நீங்களா?

98944 38854




      Our Apps Available On




      Dinamalar

      Follow us