/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/எல்லப்பாளையத்திற்கு பஸ் கட்டணம் குறைப்பு :ஆர்.டி.ஓ., உத்தரவுஎல்லப்பாளையத்திற்கு பஸ் கட்டணம் குறைப்பு :ஆர்.டி.ஓ., உத்தரவு
எல்லப்பாளையத்திற்கு பஸ் கட்டணம் குறைப்பு :ஆர்.டி.ஓ., உத்தரவு
எல்லப்பாளையத்திற்கு பஸ் கட்டணம் குறைப்பு :ஆர்.டி.ஓ., உத்தரவு
எல்லப்பாளையத்திற்கு பஸ் கட்டணம் குறைப்பு :ஆர்.டி.ஓ., உத்தரவு
ADDED : ஆக 01, 2011 10:26 PM
அன்னூர் : கோவை-அன்னூர் வழித்தடத்தில் எல்லப்பாளையத்திற்கான பஸ் கட்டணத்தை குறைத்து, கோவை வட்டார போக்குவரத்து அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.அன்னூரில் இருந்து கோவை செல்லும் வழியில் ஐந்தரை கி.மீ., தொலைவில் எல்லப்பாளையம் பிரிவும், அங்கிருந்து 400 மீட்டர் தொலைவில் தெலுங்குபாளையம் பிரிவும் உள்ளது.
எல்லப்பாளையம் பிரிவு பஸ் ஸ்டாப்பை, எல்லப்பாளையம், சுக்ரமணிக்கவுண்டன்புதூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்துகின்றனர். கோவையில் இருந்து தெலுங்குபாளையம் பிரிவுக்கு ஆறு ரூபாய் 50 காசும், அதையடுத்து 400 மீட்டர் தொலைவில் உள்ள எல்லப்பாளையம் பிரிவுக்கு எட்டு ரூபாய் 50 காசும் வசூலிக்கப்படுகிறது. 400 மீட்டர் தொலைவுக்கு இரண்டு ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இதை ரத்து செய்து, எல்லப்பாளையம் பிரிவை கட்டண நிலை பஸ் ஸடாப்பாக அறிவிக்க வேண்டும் என, உழவர் விவாத குழு அமைப்பாளர் ரங்கசாமி, நுகர்வோர் பாதுகாப்பு கழகத் தலைவர் ஓதிச்சாமி உள்ளிட்டோர் ஆர்.டி.ஓ., மற்றும் கலெக்டருக்கு மனு கொடுத்தனர். கலெக்டர் கருணாகரன் பரிந்துரைப்படி, மனு குறித்த கோவை வட்டார போக்குவரத்து துறை அதிகாரி, விசாரணை நடத்தி பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: பொதுமக்கள் எல்லப்பாளையம் பிரிவு பஸ் ஸ்டாப்பை அதிகமாக பயன்படுத்துவது விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, கோவையில் இருந்து தெலுங்குபாளையத்திற்கு வசூலிக்கப்படும் ஆறு ரூபாய் 50 காசு கட்டணத்தையே எல்லப்பாளையம் பிரிவில் இறங்கும் பயணிகளிடம் வசூலிக்கும்படி, அந்த வழித்தடத்தில் இயங்கும் தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக அலுவலர்களுக்கு உத்தரவிடப்படுகிறது. இரண்டு ஸ்டாப்புகளுக்கும் ஒரே கட்டணம் வசூலிக்கும்படி சம்மந்தப்பட்ட வழித்தடத்தில் பஸ் இயக்கும் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு தக்க அறிவுரை வழங்கும்படி பஸ் உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு, அதிகாரி தெரிவித்துள்ளார். பஸ் கட்டணம் குறைக்கப்பட்டதால் எல்லப்பாளையம் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.