"சூரிய சக்தி பயன்பாட்டில்இந்தியா வல்லரசாகும்'
"சூரிய சக்தி பயன்பாட்டில்இந்தியா வல்லரசாகும்'
"சூரிய சக்தி பயன்பாட்டில்இந்தியா வல்லரசாகும்'
ADDED : ஆக 28, 2011 09:21 PM
விருதுநகர்:''சூரிய சக்தி பயன்பாட்டில் இந்தியா வல்லரசாகும்,'' என, கேரள அரசின் எரிசக்தி திட்ட இன்ஜினியர் ஹரிக்குமார் தெரிவித்தார்.செந்தில்குமார நாடார் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில் தேசிய அளவிலான ஆற்றல் சேமிப்பு, மரபுசாரா எரிசக்தி குறித்த கருத்தரங்கு நடந்தது.
இதில் கலந்து கொண்டு பல்வேறு துறையினர் பேசினர்.மின் வாரிய செயற்பொறியாளர் சிவலிங்க ராஜா பேசியதாவது: தமிழகத்தில் தற்போது 3,500 மெகாவாட் மின் சக்தி பற்றாக்குறையாக உள்ளது. ஆக., 2012ல் புதிய மின் உற்பத்தி திட்டங்களின் மூலம் பற்றாக்குறை சரியாகும். மின் சேமிப்புக்காக சிறிய சி.எப்.எல்., பல்புகள் வழங்கப்படவுள்ளது என்றார்.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைத் தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார் பேசியதாவது: மரபு சாரா எரிசக்தி, ஆற்றல் சேமிப்பு குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்பட, புதிய பாடத்திட்டங்களை வடிவமைக்க அரசு முன்வர வேண்டும். செயல்முறைக் கல்வியிலும் இப்பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டும் என்றார்.கேரள எரிசக்தி திட்ட பொறியாளர் ஹரிக்குமார் பேசியதாவது: இந்தியா வெப்பமுள்ள நாடு. சூரிய ஆற்றலை அதிகம் உற்பத்தி செய்து பயன்படுத்த முடியும். தற்போது, சூரிய சக்தியில் இருந்து பல்வேறு செயல் திட்டங்கள் செய்யப்பட்டு வருகின்றன. உலகில் இந்தியா சூரிய சக்தி பயன்பாட்டில் வல்லரசாக மாறும் என்றார். ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமரன் நன்றி கூறினார்.