பாலிடெக்னிக் கல்லூரியில்கருத்தரங்கம்
பாலிடெக்னிக் கல்லூரியில்கருத்தரங்கம்
பாலிடெக்னிக் கல்லூரியில்கருத்தரங்கம்
ADDED : ஆக 03, 2011 01:22 AM
க.பரமத்தி: தென்னிலை அருள்முருகன் பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலா ன
தொழில்நுட்ப கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் கந்தசாமி தலைமை
வகித்தார்.கருத்தரங்கில் மாநில அளவில் உள்ள 300 கல்லூரி மாணவர்கள் ஆய்வு
கட்டுரையை எழுதினர். அதில் 61 கட்டுரைகளை தேர்வு செய்யப்பட்டது. தேர்வு
செய்யப்பட்ட கட்டுரையில் முதல் மூன்று இடங்களை பிடித்த 21
கட்டுரையாளர்களுக்கு அருள்முருகன் பாலிடெக்னிக் கல்லூரி தலைவர்
சந்திரசேகரன் பரிசு வழங்கினார்.
கரூர் அரசு கல்லூரி முன்னாள் பேராசிரியர் குருநாதன், பி.டி., கோச்
உரிமையாளர் தங்கராஜ், கணினி பேராசிரியர் ராஜேஸ்வரி, சரஸ்வதி உள்பட
அறக்கட்டளை உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.