/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஆடியில் தாய் வீடு வந்த பட்டதாரி பெண் மாயம்ஆடியில் தாய் வீடு வந்த பட்டதாரி பெண் மாயம்
ஆடியில் தாய் வீடு வந்த பட்டதாரி பெண் மாயம்
ஆடியில் தாய் வீடு வந்த பட்டதாரி பெண் மாயம்
ஆடியில் தாய் வீடு வந்த பட்டதாரி பெண் மாயம்
ADDED : ஆக 11, 2011 04:07 AM
நெய்வேலி:ஆடி மாதத்தையொட்டி தாய் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் காணாமல் போனது குறித்து நெய்வேலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பிளாக் ஐந்தில் வசிப்பவர் மாயவன், 59;
என்.எல்.சி., ஊழியர். இவரது மகள் கவிதா, 27; பி.எஸ்சி., பட்டதாரி.
இவருக்கும் புதுச்சேரியைச் சேர்ந்த ராஜ்குமார், 30 என்பவருக்கும் கடந்த
ஜூன் 3ம் தேதி திருமணம் நடந்தது.ஆடி மாதத்தையொட்டி நெய்வேலியில் உள்ள தனது
தாய் வீட்டிற்கு வந்த கவிதா கடந்த 3ம் தேதி இரவு வங்கி ஏ.டி.எம்.,
மையத்திற்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே தனது
தம்பி வெங்கடேசனுக்கு போன் செய்து, தன்னை தேட வேண்டாம்; வெளியூர்
செல்கிறேன் எனக் கூறி போனை துண்டித்துள்ளார்.டவுன்ஷிப் போலீசார் வழக்கு
பதிந்து விசாரிக்கின்றனர்.