இறகு பந்து போட்டி: மாணவர்கள் சாதனை
இறகு பந்து போட்டி: மாணவர்கள் சாதனை
இறகு பந்து போட்டி: மாணவர்கள் சாதனை
ADDED : ஆக 05, 2011 12:07 AM
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்ட இறகு பந்து கழகம், கனகமணி மருத்துவமனை
மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான போட்டிகள்
சீதக்காதி சேதுபதி விளையாட்டுஅரங்கில் நடந்தது. ஆண்களுக்கான இரட்டையர்
பிரிவில் இசக்கிராஜா, பைசுல்ரகுமான் முதலிடம், கணேஷ்ராஜன், சரவணகுமார்
இரண்டாமிடம் பெற்றனர். பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் கீழக்கரை
தாசிம்பீவி கல்லூரி மாணவி காயத்திரி, மதுமதி ஆகியோர் முதலிடம், ஜெயபிரபா,
தமிழ் இனியா இரண்டாமிடம் பெற்றனர். சீனியர் பிரிவில் கோவிந்தராஜன்
முதலிடம், குமணன் பாலசுப்பிரமணியன் ஆகியோர் இரண்டாமிடம் பெற்றனர்.
13
மற்றும் 15 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் நேஷனல் அகாடமி மாணவி ஆலிடன்
செரினா முதலிடம், பரமக்குடி கீழமுஸ்லிம் பள்ளி மாணவி அஸ்மத்பாத்திமா
இரண்டாமிடம் பெற்றனர். 17 முதல் 19 வயதிற்கு உட்பட பிரிவில் நேஷனல் அகாடமி
பள்ளி மாணவர் அலாம்தார்உசேன் முதலிடம், பரமக்குடி ஆயிரவைசிய மேல்நிலை பள்ளி
மாணவர் கார்த்திக் இரண்டாமிடம் பெற்றனர். பரிசளிப்பு விழாவிற்கு ரோட்டரி
சங்க தலைவர் முனியசாமி தலைமை வகித்தார். கலெக்டர் அருண்ராய் பரிசுகள்
வழங்கினார். மாவட்ட ஊராட்சி தலைவர் ரவிசந்திரராமவன்னி, இறகுபந்து கழக
பொருளாளர் செழியன், ரோட்டரி சங்க கவர்னர் தினேஷ்பாபு, சந்தானகிருஷ்ணன்,
செயலாளர் பார்த்தசாரதி பங்கேற்றனர். இறகுபந்து கழக செயலாளர் சேக் அப்துல்லா
நன்றி கூறினார்.