/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டிபோக்குவரத்து அதிகாரிகள் தூத்துக்குடியில் ரெய்டுதூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டிபோக்குவரத்து அதிகாரிகள் தூத்துக்குடியில் ரெய்டு
தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டிபோக்குவரத்து அதிகாரிகள் தூத்துக்குடியில் ரெய்டு
தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டிபோக்குவரத்து அதிகாரிகள் தூத்துக்குடியில் ரெய்டு
தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டிபோக்குவரத்து அதிகாரிகள் தூத்துக்குடியில் ரெய்டு
ADDED : செப் 21, 2011 01:12 AM
தூத்துக்குடி: தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி போக்குவரத்து
அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
செய்யப்பட்டது. 5 வாகனங்களின் பதிவுச்சான்று கைப்பற்றப்பட்டது.தமிழக அரசு
போக்குவரத்துதுறை சார்பில் வாகனங்களுக்கு புதிய முறைப்படி நம்பர் எழுத
வேண்டும் என்று உத்தரவிட்டது. இதற்காக வாகன உரிமையாளர்களுக்கு கால அவகாசம்
அளிக்கப்பட்டது. மோட்டார் வாகன சட்டம் 50 மற்றும் 51ன் படி தூத்துக்குடி
மாவட்டத்தில் அரசு உத்தரவுப்படி வாகனங்களில் நம்பர் எழுத கலெக்டர்
ஆஷீஷ்குமார் உத்தரவின் பேரில் போக்குவரத்து அதிகாரிகள் தொடர் சோதனை
மேற்கொண்டனர்.
நேற்று மாலை தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை அருகே கலெக்டர்
உத்தரவுப்படி வட்டார போக்குவரத்து அதிகாரி ராமலிங்கம் தலைமையில்
தூத்துக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சந்திரசேகரன், பாத்திமாபர்வீன்,
திருச்செந்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சந்திரசேகர், கனகவல்லி,
கோவில்பட்டி மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் மற்றும் போக்குவரத்து
போலீசார் நேற்று கூட்டு அதிரடி வாகன சோதனை மேற்கொண்டனர்.
அந்த வழியாக வந்த
அனைத்து வாகனங்களிலும் அரசு உத்தரவுப்படி நம்பர் பிளேட்களில் நம்பர்
எழுதப்பட்டுள்ளதா என்று சோதனை செய்தனர். நூற்றுக்கணக்கான இருசக்கர
வாகனங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 15 வாகனங்கள் அரசு உத்தரவுப்படி
நம்பர் எழுதாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதில் பத்து இருசக்கர
வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்
நிறுத்தப்பட்டது. 5 இருசக்கர வாகனங்களின் பதிவுச்சான்று கைப்பற்றப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள வாகனங்கள் அனைத்திலும் அரசு
உத்தரவுப்படி வாகனங்கள் நம்பர் எழுதும் வரை தொடர் சோதனை மேற்கொள்ளப்படும்.
கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர்
சந்திரசேகரன் தெரிவித்தார்.