/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/அடுத்தடுத்த வீடுகளில் நகை, பொருட்கள் கொள்ளைஅடுத்தடுத்த வீடுகளில் நகை, பொருட்கள் கொள்ளை
அடுத்தடுத்த வீடுகளில் நகை, பொருட்கள் கொள்ளை
அடுத்தடுத்த வீடுகளில் நகை, பொருட்கள் கொள்ளை
அடுத்தடுத்த வீடுகளில் நகை, பொருட்கள் கொள்ளை
ADDED : ஆக 26, 2011 01:07 AM
ஓசூர்: ஓசூர் அருகே, அடுத்தடுத்து உள்ள இரு வீடுகளில், மர்ம நபர்கள்
புகுந்து நகை, பொருட்களை கொள்ளையடித்தனர்.
ஓசூர் சூர்யா நகரை சேர்ந்தவர்
விஜயரங்கா. ஓய்வு பெற்ற தனியார் நிறுவன அலுவலரான இவர், மனைவியுடன் தனியாக
வசித்து வருகிறார். நேற்று மனைவியுடன் பெங்களூரு சென்றார்.அதன் பின்,
வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது, கதவு உடைக்கப்பட்டிருந்தது.
வீட்டினுள் சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த, 40 ஆயிரம் ரூபாய்
மதிப்புள்ள தங்க செயின், 15 பட்டு புடவைகள் ஆகியவற்றை மர்ம நபர்கள்
கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர்
தணிக்காசலம் விசாரிக்கிறார். * மூக்கண்டப்பள்ளி எம்.எம்.,நகரை சேர்ந்தவர்
சிவக்குமார். இவரது வீட்டில் மர்ம நபர்கள் நேற்று முன்தினம் கதவை உடைத்து
உள்ளே புகுந்துள்ளனர். வீட்டில் இருந்த பாத்திரங்களை திருடி சென்றனர்.
சிப்காட் போலீஸார் விசாரிக்கின்றனர். மூக்கண்டப்பள்ளி பகுதியில் ஒரே நாளில்
இரு வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியதால், அப்பகுதி மக்கள் பெரும்
பீதியடைந்துள்ளனர்.