/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/இலங்கை தமிழர் மறுவாழ்வுக்கு பாஜ.,நிதி சேகரிப்புஇலங்கை தமிழர் மறுவாழ்வுக்கு பாஜ.,நிதி சேகரிப்பு
இலங்கை தமிழர் மறுவாழ்வுக்கு பாஜ.,நிதி சேகரிப்பு
இலங்கை தமிழர் மறுவாழ்வுக்கு பாஜ.,நிதி சேகரிப்பு
இலங்கை தமிழர் மறுவாழ்வுக்கு பாஜ.,நிதி சேகரிப்பு
ADDED : ஆக 24, 2011 02:45 AM
தூத்துக்குடி : இலங்கை தமிழ் மக்களின் மறுவாழ்விற்காக தூத்துக்குடி யூனியனில் பா.ஜ., சார்பில் நிதியுதவி கேட்டு வசூல் செய்தனர்.
இலங்கையில் வீடு, நிலத்தை இழந்த சிறைக் கைதிகளைப் போல் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் மறுவாழ்விற்காக சேவா பாரதி அமைப்பு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது. இதற்காக பா.ஜ., கட்சி சார்பில் தூத்துக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட முத்தையாபுரம், ஸ்பிக்நகர் போன்ற பகுதியில் நிதியுதவி கேட்டு வசூல் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பாஜ.,தலைவர் கனகராஜ் தலைமை வகித்தார். மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பு செயலாளர் பாலாஜி, மாவட்ட விவசாய அணி தலைவர் இளங்கோவன், தூத்துக்குடி நகர தலைவர் பிரபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தலைவர்கள் தனசெல்வம், முனிசாமி, ஒன்றிய செயலாளர் கனிராஜ், கிளை தலைவர்கள் செண்பகராஜ், பாலாஜி, அண்ணலிங்கம் உட்பட பாஜ.,தொண்டர்கள் பலர் நிதி வசூல் செய்தனர்.