ADDED : அக் 05, 2011 01:22 AM
தர்மபுரி: தர்மபுரி நகரில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை
பெய்தது.தர்மபுரி நகரில் கடந்த இரு நாட்களாக சீதோஷண நிலையில் மாற்றம்
ஏற்பட்டு குளிர் காற்று அடித்து வந்தது. நேற்று முன்தினம் காலையில் இருந்து
மழைக்கான அறிகுறிகள் தென்பட்ட போதும் மழை பெய்யவில்லை. இரவு 8 மணிக்கு
மேல் குளிர் காற்று வீசியதோடு பரவலாக மழை பெய்தது.தொடர்ந்து இரவு 10
மணிக்கு மேல் தூரல் விட்டு, விட்டு பெய்தது. மாவட்டத்தின் பல பகுதிகளிலும்
மழை பெய்தது. மழையால் தர்மபுரி நகரில் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கி
சாலைகள் சேறும், சகதியுமாக மாறிப்போனது. சாக்கடை கால்வாய்களில் சாக்கடை
நீருடன் மழை நீர் தேங்கியது.
நேற்று காலையில் மழைக்கான அறிகுறியுடன் இருண்ட வானிலை இருந்தது. ஆனால் பகல்
நேரத்தில் வழக்கம் போல் வெயில் அடிக்க துவங்கியது. மதியம் 3 மணிக்கு மேல்
மிதமான வெயில் இருந்தது. மாலையில் இருண்ட வானிலை இருந்த போதும், மழை
பெய்யவில்லை.


