மாணவி கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்: ஐகோர்ட் கிளை உத்தரவு
மாணவி கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்: ஐகோர்ட் கிளை உத்தரவு
மாணவி கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்: ஐகோர்ட் கிளை உத்தரவு
ADDED : செப் 23, 2011 11:07 PM
மதுரை: தூத்துக்குடி மாவட்டம் தெற்கு வீரபாண்டியபுரத்தில் மாணவி இறந்த வழக்கில், போலீஸ் விசாரணையில் குழப்பம் இருப்பதால், சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
தெற்கு வீரபாண்டியபுரத்தை சேர்ந்த ராமசுப்பு தாக்கல் செய்த மனு: என் மகள் தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
2010 டிச., 18ல் குப்பைகள் கொட்ட வீட்டிலிருந்து வெளியேறியவர் திரும்பவில்லை. பின், அவர் கண்மாயில் பிணமாக மிதந்தார். மாடசாமி என்பவரை போலீசார் கைது செய்தனர். ஆனால், என் மகள் கொலையில் பலருக்கு தொடர்பு இருக்கிறது. உண்மை குற்றவாளிகளை தப்ப வைக்க, போலீசார் வழக்கை திசை திருப்புகின்றனர். வேறு போலீசார் விசாரிக்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மாலா, ''இவ்வழக்கில் பெண் அணிந்திருந்த நகைகள் மீட்கப்படவில்லை. போலீஸ் விசாரணை சரியான திசையில் செல்லவில்லை. விசாரணையில் குழப்பம் உள்ளது. வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்படுகிறது. அவர்கள் விசாரித்து மூன்று மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்,'' என்றார்.